பறவைகளுக்கு பஞ்சமே இல்லைங்க எங்கவீட்டு பால்கனியிலிருந்து பார்த்தா ஒரு பறவைகள் சரணாலயம் ரேஞ்சுக்கு நிறைய பறவைகளைப் பார்க்கலாம். ஆனால் படம் எடுக்கறதுங்கறது சாதாரண விசயம் இல்லை. அது விருட் விருட்டுன்னு பறக்கும்.. ஒரு செகண்டு க்கொருமுறை அங்க இங்க பார்க்கும். இருந்தாலும் அவ்வப்போது க்ளிக்கி வைப்பது தான்.
தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக இந்த மாதம் அனுப்புவதற்கென்றே ஒற்றைக்காலில் கொக்காட்டம் தவமிருந்து எடுத்த படங்களில் சிலவற்றை
கூகிளில் போட்டிருக்கிறேன்.
போட்டிக்கான படம் இது தான். ( பெயர் என்னப்பா சொல்லுங்க ) ரொம்ப குட்டியூண்டு குருவி இது .. பறக்கும்போது அலைமாதிரி மேலும் கீழுமா பறக்கும்.
மேலே இருக்க படம் எடுக்கறதுக்கு முன்ன அடிக்கடி அங்க இங்க திரும்பி அது ரொம்ப படுத்திடுச்சு..
மயிலும் பருந்தும் நேற்று அருகில் வரவில்லை. லேப்விங் வந்தது ஆனால் என் கேமிரா க்ளோசப் போகவில்லை. சரி என்று என் வீட்டு பால்கனியில் அரிசி சாதம் என்று விருந்து வைத்து அழைத்தபோது வந்த பறவைகளை எடுத்திருக்கிறேன்.
கம்பத்தோடு கம்பமாக இருப்பவர் தலையைத் திருப்பி தரிசனம் தர எத்தனை நேரம்?
கம்பீர நடை போட்டவள் போட்டோ க்ளிக்கும்போது மட்டும் தலையை மேஜிக்கில் மறைத்துவிட்டாளே .