முதன் முதலா கோனிகா கேமிரா வாங்கினப்போ சந்தோஷத்துக்கு அளவே இல்லை.. என் சம்பாத்தியத்தில் வேற வாங்கினேனா சொல்லனுமா ... அப்புறம் அதையும் இதையும் எடுத்து கத்துக்கிட்டு இருக்கும்போதே மணிரத்னம் படம் மாதிரி நமக்கும் இருட்டுல வித்தியாசமா கலைநயத்தோட படம் எடுக்கனும்ன்னு ஆசை வந்துருச்சு...
உடனே ஒரு மெழுகுவத்தி ஸ்டேண்ட் எடுத்து அதுல மெழுகுவத்தியை ஏத்திவச்சு ஒரு கண்ணாடி க்ளாஸ் வேற இருக்கும் அதுக்கு அதையும் போட்டு வச்சேன்.. மாடலா நிக்க என் தம்பியைக் கூப்பிட்டு "வா வந்து அப்படியே கன்னத்துல கை வச்சு போஸ் கொடுடா.. எதோ யோசிக்கற மாதிரி இருக்கனும் சொல்லிட்டேன்"னு பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு டைரக்ட் செய்து அவனும் நல்லா போஸ் கொடுத்தான்..
லைட்டு எல்லாம் அணைச்சுட்டு இருட்டுல க்ளிக்கியாச்சு க்ளிக்கினப்பறம் தான் தெரிந்தது அந்த கேமிரா ப்ளாஷ் அடிக்காதேன்னு சொன்னாலும் இருட்டுல தானாவே அடிச்சிடும் ன்னு. பிரிண்ட் போட்டப்ப பாத்தா ஒரு வித்தியாசமும் இல்லை.. பகல் போல வெளிச்சமா அதுல மெழுகுவத்தி பக்கத்துல சூப்பரா தலைவர் யோசிச்சிட்டு இருக்கார்.. :)
அதுக்கப்பறம் ரொம்ப நாள் கழிச்சு வாங்கின பெண்டக்ஸ் எம் 30 ல்
இருட்டுல எடுக்க தனியா ஒரு ஆப்சன் இருந்தது கை ஆட்டாம வச்சிருக்கனும். அது கொஞ்ச மெதுவா ஷ்ட்டர் திறந்து மூடும்.. அதுல எடுத்த படத்தை இப்ப இங்க போட முடியாது .. ஸ்கேன் பண்ண வசதி இல்லை.
சிங்கப்பூரில் ரொம்ப பக்கத்துல புலியை எடுத்தேன்.. கண்ணாடி க்கு பின்னால இருந்தது . கொஞ்சம் உத்து ப்பாக்கணும் படத்தை அவ்வளவுதான்.
அப்பறம் ரோல் வாங்கி கட்டுப்படியாகாத அளவு என்னோட போட்டொ எடுக்கும் ஆசை அதிகமா ஆனதால் வீடியோ கேமிராவுலயே எடுக்க ஆரம்பிச்சிட்டேன் .
அதுல கொஞ்சம் தரம் கம்மியா தான் இருக்கும் இருந்தாலும் கண்டதை எடுக்க வசதியான டிஜிட்டல் கேம்ராவாச்சே.. எடு அழிச்சுக்கோ கணினியில் குப்பையா சேத்துவச்சுக்கோன்னு இருக்கேன். .. இது எல்லாம் சர்வேசனின் முதல் "இரவு" புகைப்படம் பார்த்ததால் சுற்றப்பட்ட கொசுவத்தியே...
Saturday, November 17, 2007
Monday, November 12, 2007
ஓரம்போ ......
இது தாங்க டில்லியின் விஐபி ஏரியா அரசாங்க அதிகாரி எல்லாம் இங்க தான் இருக்காங்க.. முக்கால்வாசி இந்த ரோட்டுலதான் நாங்க போறது....சிக்னல் இல்லை டிராபிக் இல்லை.. சுத்தி சுத்தி போற சாலை .... முதல் முதலா சின்ன ஊரிலேர்ந்து இங்க வந்தப்போ ரொம்பவே அசந்து போனது இந்த பெரிய சுத்தமான சாலைகள்.
இது எம்பஸி எல்லாம் இருக்கற சாலை.. கொடியெல்லாம் கலர் கலரா இருக்கு.. ஆனா நான் எடுத்த மொபைல் போன் போட்டோல அத்தனைக்கு தெளிவா இல்லைல்ல நானும் கலந்துக்குவேன்னு பிடிவாதமா மாசமாசம் போட்டியில் கலந்துக்கறேன் போன மாசம் விட்டுப்போச்சு
பார்டர் போட இன்னும் ஜிம்ப் தரவிறக்கலை.. தீபா க்ளாஸ் எடுத்தும் பார்டர் போட போட்டோஷாப் ஒத்துழைக்கலை .. அதனால் இந்தமுறை பார்டர் உதவி: ஒப்பாரி.நன்றி ஒப்பாரி.
பி.கு(ஓரம்போ....... உங்களை இல்லங்க என்னைத்தான்..
போட்டியில் முதல் சுற்றுல ஓரம்போ ன்னு வெளிய வர்ரது என் படம் தாங்க அதான் இந்த தலைப்பு)
Subscribe to:
Posts (Atom)