Friday, March 14, 2008
வட்டத்துக்குள் வானம்
மார்ச் மாத போட்டிக்கு பிரதிபலிப்புன்னு சொன்னதும் என்ன படம் எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப யோசனை செய்யவே இல்லை.. ஏகப்பட்ட வேலை அப்பறமா யோசிக்கலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு தள்ளிப்போட்டே நாட்கள் ஓடிடிச்சு.. கடைசியில் எப்படியும் எடுத்தே ஆகவேண்டிய நாள் வந்ததும் பிரதிபலிப்புன்னா நினைவுக்கு வந்தது அடுப்படியில் பாத்திரம் பிரதிபலிக்கறது தான்.. சரிதான் அதுலயே இதுவரை வேலைக்காரங்களிடம் போட்டு கீறல் விழாத பாத்திரமா எடுத்து மெதுவா தண்ணீரில் அலசி வெயிலில் காயவச்சு எடுத்தாச்சு..
எதுக்கும் இருக்கட்டுமே என்று புதுசா போட்ட க்ரானைட் அலமாரிக்கும் ஒரு விளம்பரம்.. ஆகா என்ன பளபளப்பு பாருங்க ...
முதல் இரண்டு படங்களும் மார்ச் மாதப்புகைப்படப் போட்டிக்கு .
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
:)) பிரதிபலிப்புகள் நன்றாக இருக்கிறது...
:))வெற்றி பெற வாழ்த்துக்கள்..
மூனாவது படம் கருப்பு வெள்ளையா?
வட்டத்துக்குள் வானம் :)
சட்டிக்குள் வானத்தை பிடித்து விட்டீர்கள் :)
நன்றி சென்ஷி.. வெற்றிக்கெல்லாம் ரொம்ப தூரம் இருக்கு.. இந்த முறை எல்லாரும் கலக்கி இருக்காங்க.. நாம தலைப்புக்கேத்தமாதிரி சிறுமுயற்சி.
------------------
சொக்கர் சும்மா தான் ப்ளாக் அண்ட் ஒயிட்டா மாத்தி போட்டது அது.. ஏறக்குறைய கருப்பு வெள்ளையாத்தான் இருந்தது முதல்லேயே..
----------
ஆமா இன்னும் கூட முழுசா வானத்தை பிடிக்க நினைத்தேன் ..சன்ஷேட் வந்துடுச்சு மேல..
மூன்றாவது படம் நல்லாருக்கு!
பா5த்திரத்துக்குள் வானமே வந்துவிட்டது. நல்ல கற்பனை..
வ்ச்ச்ழ்த்துக்கள்
புகைப்படத்தை விடவும்
தலைப்பு அருமையாக இருக்கு
தலைப்பை விடவும்
புகைப்படம் அழகா இருக்கு
:)
கடைசி படம் நல்லாருக்கு...(கலரில் விளையாடின மாதிரி இருக்கு) ;)
2 படமும் நல்லா இருக்குங்க அக்கா.:)
எப்பவும் கிச்சன் வேலையிலேயே இருக்கோம்னு சொல்லிக்கவாப்பா இது..;-))
வானம் நல்லா இருக்கு
தலைப்பைமட்டும் பார்த்துட்டுக் கவிதையோன்னு நினைச்சுக் கொஞ்சம் பதுங்குனேன்.:-))))
வந்து பார்த்தா அட்டகாசமா இருக்கு.
முதல் படம் அருமை...
அதுவும் அந்த பூ எட்டிப் பார்ப்பதுப் போல் இருக்கு..
வானம்,மேகம் எல்லாமே நல்லா வந்திருக்கு...
வாழ்த்துக்கள்..
Post a Comment