Monday, November 12, 2007

ஓரம்போ ......


இது தாங்க டில்லியின் விஐபி ஏரியா அரசாங்க அதிகாரி எல்லாம் இங்க தான் இருக்காங்க.. முக்கால்வாசி இந்த ரோட்டுலதான் நாங்க போறது....சிக்னல் இல்லை டிராபிக் இல்லை.. சுத்தி சுத்தி போற சாலை .... முதல் முதலா சின்ன ஊரிலேர்ந்து இங்க வந்தப்போ ரொம்பவே அசந்து போனது இந்த பெரிய சுத்தமான சாலைகள்.
(முதலாவதும் இந்த புகைப்படமும் போட்டிக்கு...)
இது எம்பஸி எல்லாம் இருக்கற சாலை.. கொடியெல்லாம் கலர் கலரா இருக்கு.. ஆனா நான் எடுத்த மொபைல் போன் போட்டோல அத்தனைக்கு தெளிவா இல்லைல்ல நானும் கலந்துக்குவேன்னு பிடிவாதமா மாசமாசம் போட்டியில் கலந்துக்கறேன் போன மாசம் விட்டுப்போச்சு

பார்டர் போட இன்னும் ஜிம்ப் தரவிறக்கலை.. தீபா க்ளாஸ் எடுத்தும் பார்டர் போட போட்டோஷாப் ஒத்துழைக்கலை .. அதனால் இந்தமுறை பார்டர் உதவி: ஒப்பாரி.நன்றி ஒப்பாரி.பி.கு(ஓரம்போ....... உங்களை இல்லங்க என்னைத்தான்..

போட்டியில் முதல் சுற்றுல ஓரம்போ ன்னு வெளிய வர்ரது என் படம் தாங்க அதான் இந்த தலைப்பு)

29 comments:

Baby Pavan said...

நல்லாருக்கு நல்லாருக்கு....

ஆயில்யன் said...

தலைநகரத்து போட்டோக்கள் சூப்பர்!
நான் முதல்ல ஒரம் போயிக்கிறேன் அக்கா...!
வாழ்த்துக்கள் ( பேரு வேற நியூமரலாஜிப்படியில இருக்கு...!!)

முத்துலெட்சுமி said...

நன்றி பவன்...இப்போதைக்கு பின்னூட்ட இளவரசன் நீதான் போலருக்கு..எங்கபார்த்தாலும் உன் பின்னூட்ட்டம் தான்.. :)

முத்துலெட்சுமி said...

நியூமராலஜிப்படி பேரா யாரோடது ஆயில்யன்..? பிகு படிக்கலியா ஓரம்போக வேண்டியது நீங்க இல்ல...

ஆயில்யன் said...

என்னக்கா! தன்னடக்கம் ரொம்ப தாண்டவமாடுது போல....!!!

ஆயில்யன் said...

MUTHU "LET C"HUMI

...........?!?!?!?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//Baby Pavan said...
நல்லாருக்கு நல்லாருக்கு....
//

தம்பிக்கு ஒரு ரிப்பீட்டேய்.. :-)

தமிழ்நதி said...

சென்னைச் சாலைகளின் போக்குவரத்து நடைபாதைவாசிகளை அச்சமூட்டுகிற ஒன்று. நீங்கள் காட்டிய சாலைகளில் மாலையில் நடந்து போனால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தேன். ம்....!கொடுத்து வைத்தவர்கள்!

Deepa said...

ஹ்ம்ம்.. நம்மள மாதிரி பொதுஜனதுக்கு இப்படி ஒரு ரோட் பார்த்து தான் ரசிக்க முடியும்.. சாதாரள சாலையும் இப்படி இருக்ககூடாதான்னு ஏக்கம் தான் வருது ..
படம் பிரமாதம்

முத்துலெட்சுமி said...

ஆயில்யன் ,ஒருவேளை நான் மூன்றாவது பரிசாவது வாங்க தகுதியான படத்தை போட்டுவிட்டு தன்னடக்கமாசொல்லி இருந்தா பரவாயில்லை ஒத்துக்கலாம்..
இதுக்கு முன்னால போட்டிஎல்லாம் போய் பாருங்க பிக்சல் பத்தாது.. முதல் ரவுண்டில் கழட்டி விடப்படும் போட்டோவில் என்னோடது கண்டிப்பா இருக்கும்.. எனக்கு போட்டோ எடுக்க ஆசை இருக்கும் கேமிராவச்சு ஒப்பேத்தறேன்.. அதான் தன்னடக்கம்.

முத்துலெட்சுமி said...

முத்துலெட்சுமியா அதாவது ஆயில்யன் லக்ஷ்மின்னா வடமொழி எழுத்து வருதாம் .. என் தமிழ் மொழி கிறுக்கு அதை அப்படி மாத்தி எழுத வச்சிருக்கு நியுமராலஜி இல்லை..

முத்துலெட்சுமி said...

வலைச்சர ஆசிரியர் மை ப்ரண்டு நீங்க பிசிதான் தெரியுமே .. ரிப்பீட்டேய் போட நேரம் கிடைச்சதெ நன்றி நன்றி..

முத்துலெட்சுமி said...

நதி ரொம்ப சிரிப்பா வருது.. நான் அதே சாலையை பயமா பாப்பேனாக்கும்.. ஆமா ஆளரவம் தெரியாத அந்த பாதையில் எப்போதாவது நடந்து போகும் ஆட்களை பார்த்து எத்தனை தைரியம் என்று நினைப்பேன்.. எங்க ஊரைப்பத்தி தான் தெரியுமே உங்களுக்கு செய்தித்தாள் படிப்பீர்களே..

முத்துலெட்சுமி said...

சரியா சொன்னீங்க தீபா அந்த விஐபி பாதைகள் குண்டு குழி குறைவானதாய்.. தண்ணீர் தேங்காததாய் வடிவமைக்கப்பட்டு சீராக பராமரிக்கப்படுகிறது.. மற்றவை அப்படி இல்லை..பராமரிப்பும் கம்மி போடும்போதே அடுத்த காண்ட்ராக்ட் எப்பவரும் என்று எதிர்பார்க்கும் படி இருக்கும் வேலை. இன்னோரு விசயம் அந்த ரோடெல்லாம் ஆங்கிலேயர் அந்த காலத்தில் பார்த்து பார்த்து அகலமாக மரங்களோட வடிவமைத்ததாம்..

Boston Bala said...

படங்கள் கலக்கல்.

---முதல் முதலா சின்ன ஊரிலேர்ந்து இங்க வந்தப்போ ரொம்பவே அசந்து போனது ---

சென்னையில் இருந்து போன எனக்கும் இதே உணர்வுதான் வந்தது.

காட்டாறு said...

யப்பா... எத்துனை அழகு! வழி நெடுக மரங்கள்! அசோகர் சொன்னதை செய்துட்டார்ன்னு நெனச்சேன். நீங்க பின்னூட்டத்துல ஆங்கிலேயர் போட்டதுன்னு சொல்ல.. மனசு பொசுக்குன்னு ஆச்சி.

முத்துலெட்சுமி said...

பாஸ்டன் பாலா நன்றிங்க.. கலக்கல்லாம் ரொம்ம்ம்ப பெரிய வார்த்தைங்க..

பெங்களூரில் ஒரு சில இடம் இப்படி மரங்களோட பார்த்த நியாபகம்.. சென்னையில் எல்லாம் மாறிடுச்சே இப்ப..

முத்துலெட்சுமி said...

காட்டாறு நிறைய மரங்கள் மற்றும் அந்த அரசாங்க வீடுகளின் தோட்டங்களுமாக அழகா இருக்கும்.. நடுவில் இந்தியா கேட் வரும்.. ராஷ்ட்ரபதி பவன் வரும்.. ஹை செக்யூரிட்டி மந்திரிகள் வீடுகள் வரும்.. திடீர்ன்னு யாராவது நம்மளுக்கு சல்ய்யூட் வச்சா அப்படியே புளங்காகிதம் அடையாம பின்னாடி பாக்கனும் யாரோட வண்டி வருதுன்னு..

நட்டு said...

காமிராக் கண்ணுக்கு செல்போனும் ஆயுதம் போல!வாழ்த்துக்கள்.

மங்கை said...

ஆஹா...நல்லா இருக்கே... இந்த ஊர்ல இது தான் மிச்சம்

கோபிநாத் said...

புகைப்படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு...:)

குசும்பன் said...

எல்லா படமும் அருமை!
இதை எல்லாம் பார்த்தா நான் எடுத்துவைத்து இருக்கும் புகைபடத்தை போடலாமா என்று யோசிக்கவேண்டி இருக்கு!

✪சிந்தாநதி said...

அழகான சாலைப்படம். எனக்கு பரிச்சயமான சாலைகளும் கூட. நார்த் அவென்யூவில் தான் டில்லி சென்ற போதெல்லாம் தங்கியிருந்தோம்.

சமீபத்தில் பாலபாரதியிடம் பேசிக் கொண்டிருந்த போது டில்லி சாலைகள் ரொம்ப மோசம் என்றதும் எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. நான் அதிகம் பார்த்தது இந்த சாலைகள் என்பதால் மோசமான சாலைகள் அதிகம் கண்ணில் படவில்லை;)

முத்துலெட்சுமி said...

உண்மைதான் நட்டு ... செல்போன் வந்த உடன் இப்ப அதிகமாவே சுட்டுத் தள்ளரேன் தான்..கேமிரா கூட மறந்து போவோம் இது எப்போவும் உடனே இருக்குமே... :)

முத்துலெட்சுமி said...

மங்கை கோபிநாத் நன்றி..
இன்னும் புது புது ரோடுகளும் பாலங்களும் என்று தில்லி புத்துயிர் ஊட்டப்பட்ட்டுகொண்டே இருக்கிறதே .. ஆசிய விளையாட்டு போட்டிவேற வருதே.. வெள்ளையடிக்கவேணாமா ஊரை.. அதான்..

முத்துலெட்சுமி said...

பயப்படாம போடுங்க குசும்பன்..கலந்து கொள்வதே சிறப்புதான்..ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் எல்லா ம் இல்லையே..

முத்துலெட்சுமி said...

உண்மைதான் சிந்தாநதி ஊரில் இரண்டு வித எல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன.... வழுக்கும் சாலைகளும் .. குண்டும் குழியும் ஆனதும் .. ஆனால் பொதுவாகவே மற்ற எல்லா ஊரையும் விட சாலைகள் பரவாயில்லை என்று தான் சொல்லனும்..

நாகை சிவா said...

முதல் படம் சூப்பரா இருக்கு...

மற்ற போட்டியாளர்களை ஒரம்போ என சொல்லிட்டு முன்னேறுவது நல்லாவே தெரியுது :)

வாழ்த்துக்கள்

அருட்பெருங்கோ said...

முதல் படம் அழகு.

வெற்றி பெற வாழ்த்துகள்!!!

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers