Thursday, December 24, 2009

மெர்ரி க்ரிஸ்மஸ் :)இது எங்கள் வீட்டு கிருஸ்துமஸ் மரம். பரிசு எல்லாம் அலங்காரம் தான்.உண்மையான பரிசு மகனுக்கு தாமஸ் த ட்ரயின் ஸ்டிக்கர் புக்.ஆங்கிலம் ஸ்மால் லெட்டர் எழுதப் பழகுவதற்கு... கிருஸ்மஸ் தாத்தா ராத்திரியே கொண்டுவந்து வச்சிட்டுப் போயிட்டாராம். :)இது எங்க ஊரு ஷாப்பிங் மால் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்.உள் அலங்காரங்கள் ஸ்னோ மேன்.சாண்ட்டாவோட வீடும் வீட்டுக்குப் போகிற வழியும்...அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ன ஒரு அழகான பாடல் இல்ல ..
மெர்ரி கிரிஸ்த்மஸ் :)

சபரி துணுக்ஸ் : பள்ளிக்கூடத்துல கிருஸ்துமஸ் பார்ட்டிக்கு கிளம்பறார்.

கிருஸ்துமஸ் தொப்பி போட்டுக்கோடா ..
நோ நான் என்ன தாத்தாவா? என்கிட்ட என்ன ஸ்லெட்ஜா இருக்கு .. சைக்கிள் தான் இருக்கு
இல்லடா பர்த்டே தொப்பி டா
ஓகே ஜீஸஸ் பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும் போது போட்டுக்கிறேன் பேக்லயே வைங்க ...

Thursday, August 6, 2009

SAME PINCH


Sunday, July 12, 2009

இது என்ன இடம்?


இங்கே இருக்கின்ற படங்களில் உள்ள இடங்களெல்லாம் உங்களுக்கு தெரிந்த இடம் தானே? தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு எது சரியான தேர்வு ?

இந்தியா கேட் ஐ அருகிலிருந்து எடுக்க நினைத்திருந்தேன். அடிக்கின்ற வெயிலில் அது நடக்காத காரியம்.. கார் நிறுத்துமிடத்திலிருந்து வெகு தூரம் நடக்கவேண்டும். அதற்கு பதிலாக காரிலிருந்தே எடுக்க வசதியான இடமாக தேர்ந்தெடுத்து சென்றோம். புது கேமிராவில்(கேமிரா CANON DIGITAL IXUS 9515) படங்கள் எடுக்க இன்னும் கொஞ்சம் பழகவேண்டும். .

Monday, May 11, 2009

இவர் பெயர் என்ன?- மே மாதப்புகைப்படம்


பறவைகளுக்கு பஞ்சமே இல்லைங்க எங்கவீட்டு பால்கனியிலிருந்து பார்த்தா ஒரு பறவைகள் சரணாலயம் ரேஞ்சுக்கு நிறைய பறவைகளைப் பார்க்கலாம். ஆனால் படம் எடுக்கறதுங்கறது சாதாரண விசயம் இல்லை. அது விருட் விருட்டுன்னு பறக்கும்.. ஒரு செகண்டு க்கொருமுறை அங்க இங்க பார்க்கும்.  இருந்தாலும் அவ்வப்போது க்ளிக்கி வைப்பது தான்.
தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக இந்த மாதம் அனுப்புவதற்கென்றே ஒற்றைக்காலில் கொக்காட்டம் தவமிருந்து எடுத்த படங்களில் சிலவற்றை கூகிளில் போட்டிருக்கிறேன். போட்டிக்கான படம் இது தான். ( பெயர் என்னப்பா சொல்லுங்க )  ரொம்ப குட்டியூண்டு  குருவி இது ..  பறக்கும்போது  அலைமாதிரி மேலும் கீழுமா பறக்கும்.

மேலே இருக்க படம் எடுக்கறதுக்கு முன்ன அடிக்கடி அங்க இங்க திரும்பி அது ரொம்ப படுத்திடுச்சு..மயிலும் பருந்தும் நேற்று அருகில் வரவில்லை. லேப்விங் வந்தது ஆனால் என் கேமிரா க்ளோசப் போகவில்லை. சரி என்று என் வீட்டு பால்கனியில் அரிசி சாதம் என்று விருந்து வைத்து அழைத்தபோது வந்த பறவைகளை எடுத்திருக்கிறேன்.

கம்பத்தோடு கம்பமாக இருப்பவர் தலையைத் திருப்பி தரிசனம் தர எத்தனை நேரம்?


கம்பீர நடை போட்டவள் போட்டோ க்ளிக்கும்போது மட்டும் தலையை மேஜிக்கில் மறைத்துவிட்டாளே .

Monday, February 9, 2009

ரெடி 1 ..2..3.. ஆக்ஷன் - கண நேரக்கண்ணாடிமுதலில் அலைவந்து அழிக்க நினைக்கும் காட்சியைத்தான் போட்டிக்கு அனுப்ப எண்ணினேன்.. இது என் தம்பியின் கேமிராவில் எடுத்தது. கொஞ்ச நாட்களாகவே என் சாதா கேமிராவில் எடுப்பதை போட்டிக்கு அனுப்புவதில் மனதிற்கு சம்மதமில்லை. ;)


சமீபத்தில் தோழியின் மகளை தோழியின் கேமிராவால் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்..அதில் சிக்கிய சில கண நேரக்கண்ணாடிகள் அழகாக இருந்தபடியால் அவற்றில் முதல் சுற்று இரண்டாம் சுற்றுக்கு விட்டு தேர்ந்தெடுத்த போட்டிக்கான படம் கடைசியில் இருக்கிறது...

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers