Monday, November 10, 2008

அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்!!



சிறுமுயற்சி கங்கா ஆரத்தி பதிவில் இந்த அழகான பெண்ணைப்பற்றி எழுதியதும் எல்லாரும் படம் ஏன் போடலன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க..ரொம்ப ஆர்வப்படுத்திட்டு நல்லா இல்லன்னா என்ன பண்ரதுன்னு பயம் . ஆனா எடுத்த விதம் வேண்டுமானால் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே தவிர அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள். தேர்ந்த ஒரு மாடலைப்போல ஆடாமல் அசையாமல் புன்னகையும் மாறாமல் இருந்தாள். விளக்கு வாங்கி விடவேண்டும் என்று மகள் ஆசைப்பட்டபோது அந்த பெண்ணிடமே வாங்க விரும்பினேன் . ஒரு நன்றி தான். ஆனால் அவளைவிட சிறுவன் ஒருவன் இருந்ததால் அவள் அவனிடம் வாங்கும்படி சொன்னாள். எனக்கு அதன் பின்னர் திருப்தியாக இல்லை. பின்னர் மகனுக்காக வாங்கும்போது தேடிப்போய் அவளிடமே வாங்கினேன்.

ஒரு வெளிநாட்டவர் ஒரு பெண்மணியை புகைப்படமெடுக்க முயன்றார். அந்த பெண்மணி உடனே சரியாக அமர்ந்து கொண்டார். உடனே அவர் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு சிரித்தார். " நோ நோ நாட் லைக் திஸ் " என்று முன்பு தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்தமர்ந்த அவளைப்போல நடித்துக்காண்பித்து அதேபோல் அமர்ந்ததும் படம் எடுத்து சென்றார். அவர் சென்றபின் வெகுநேரம் வெக்கச்சிரிப்புடனே இருந்தார்கள் அந்த பெண்மணி.






இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். அவர் வெறெங்கோ பார்க்கும்போது சட்டென்று எடுத்துவிட்டேன். அவர் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பிப்பது போல் இருந்தது ஓடிவந்துவிட்டேன். பாருங்கள் வெறெங்கோ பார்ப்பது போல ஆனால் புகைப்படத்துக்கு நேராகத்தான் தலையை வைத்திருக்கிறார். படம் எடுத்துவிட்டு காசு கொடுப்பார்களா இருக்கலாம். அது இன்னமும் எனக்குப் பழக்கமாகவில்லை.

Wednesday, November 5, 2008

காசிக்கு போய் பதிவெழுதுவதை விட்டுவிடவில்லை





காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்று நான் பதிவெழுதுவதை விட்டுவிட்டேனென்று தமிழ்பிரியன் கிளப்பிக்கொண்டிருக்கும் புரளி தான் அவசரமாக இப்பதிவினை எழுதத்தூண்டியது. காசி அலகாபாத் செல்லும் பயணத்தை ஒரு புகைப்படப்பயணமாக நினைத்துக்கொண்டு என் ஸ்டேட்டஸ் மெஸேஜாகக் கூடப் போட்டுவைத்திருந்தேன். சிவி ஆர் மட்டும் தான் அடிக்கடி புகைப்படப் பயணம் போவாரா? நாங்களும் போவோம்ல..

ஆனா எனக்கு ஒரு முறை போட்டோ எடுக்க வாய்ப்பு தா என்று கேட்டுகொண்டே சின்னக்கேமிரா மேனும் அடம்பிடிப்பதால் சமாளித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வீடியோ வாக நிறைய எடுத்துவிட்டதும் புகைப்படங்கள் அதிகம் எடுக்காததற்கு காரணம்.
கையோடு நிறைய காலி சிடிக்கள் இருந்ததால் வீடியோ எடுக்கும் ஆசை அதிகமாகிவிட்டது.

வீடியோவை எடுத்து முடித்தவுடன் அது சேமிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பொறுமையாக காத்திருக்காமல் அவசரப்பட்டு போட்டோவுக்கு மாற்றுவதால் எடுத்த பகுதிகள் சில வற்றை இழக்க நேரிடும் என்பதை இப்பயணத்தில் புரிந்து கொண்டேன்.
இரவில் படம் எடுக்கும் போது பயன் படுத்த என்று "நைட் ஷாட் ப்ளஸ் " என்ற ஒரு பட்டன் இருப்பதையும் இம்முறை தான் பயன்படுத்தினேன்.




சாதுக்களின் நகரத்திற்குப் போய்விட்டு சாதுவைப் புகைப்படமெடுக்காவிட்டால் எப்படி? கங்கைக்கரையில் ஒரு சாது.
அவ்வப்போது இங்கே சில படங்களை பதிவிடுகிறேன்.

Saturday, August 23, 2008

கண்ணன் பிறந்தான்.....



கண்ணன் பிறந்தான்.hammaa வில் பிண்ணனியில் கண்ணன் பாட்டு இசை ஒலிக்கும் வேளையில் தவழ்ந்து வந்த கண்ணன் கீரிடம் , மாலை அணிந்து, திண்டு மெத்தையில் சாய்ந்தபடி நனைத்த அவல், சீடை உண்ணுகிறான்.

Thursday, August 14, 2008

மெகாப்போட்டிக்கு ஒரு குட்டியூண்டு குருவி





தமிழில் புகைப்படக்கலையின் ஆகஸ்ட் மாதமெகாப்போட்டிக்கான படம் இந்த முதல் படம்.

சிவிஆரின் ப்ளாக்கரில் படம் பெரியதாகக் காட்டுவது எப்படி? படிச்சு படம் பெரிதாகவும் வழக்கமான படம் சிறிதாகவும் எப்படி இருக்கும்ன்னு இன்று படித்த பாடத்துக்கு படம் காட்டியாச்சு..

வழக்கம்போல மொபைல் கேமிரா புகைப்படம் தான் .இந்த சின்ன பச்சை நிறக்குருவி பால்கனியில் இருக்கும் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொத்திக்கொண்டே இருக்கும். விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவது வழக்கம். கதவு திறந்திருந்தால் வராது. அதனால் கொசு நுழைய முடியாத வலைக்கதவின் உள்ளே இருந்து தான் புகைப்படம் எடுக்க முடிந்தது.

Thursday, August 7, 2008

இயற்கையின் நிறங்கள்









தில்லி வனவிலங்கு காட்சியகத்தில் எடுத்த சில மொபைல் கேமிரா படங்கள்.

Friday, June 13, 2008

சர்பத் ஐஸ்காரர்

இந்தியா-பாக் பார்டரில் .. ஐஸ் குச்சியில் கலரை ஊத்தி வித்துக்கிட்டிருந்தார்.. அந்த இடத்தில் தான் எத்தனை தேசியப்பற்றுங்கறீங்க.. குச்சி ஐஸ் தொப்பின்னு அமோக விற்பனைதான்.. இது ஜூன் மாதப்போட்டிக்கு ...

Monday, May 12, 2008

ஜோடின்னா இதுவல்லவா ஜோடி!!

நாட்டுல எல்லா இடமும் சுத்தமா அழகா இருக்கனுங்கறதுக்காக வெயிலிலும் மழையிலும் நிக்கறாங்க பாருங்க இவங்க தானே சிறந்த ஜோடி..


இதுல எது சிறந்த ஜோடியோ அவங்களை அனுப்பலாம் ஜோடி போட்டிக்கு....

Tuesday, April 15, 2008

தனிமையாய்.....




அவசரமா கடைசி நாளில் போடனுமேன்னு பழய படங்களைத் தேடி பிடித்ததில் இந்த கழுகாரும் பூனையாரும் தான் தனிமையில் வாடியவங்க..
அப்படியே பதிவில் இணைத்துவிட்டேன்.. எந்த பிற்சேர்க்கை வேலயும் செய்யவில்லை.. செய்ய நேரமும் இல்லை .. :-(
கழுகாரைத்தான் ஏப்ரல் 2008 போட்டிக்கு இணைக்க எண்ணம்.. ஆனா எந்த கழுகார் முதலா இரண்டாவது தெரியலயே.. யாரச்சும் சொல்லுங்க.. இன்னும் நேரம் இருக்குல்ல.. :-)

Friday, March 14, 2008

வட்டத்துக்குள் வானம்



மார்ச் மாத போட்டிக்கு பிரதிபலிப்புன்னு சொன்னதும் என்ன படம் எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப யோசனை செய்யவே இல்லை.. ஏகப்பட்ட வேலை அப்பறமா யோசிக்கலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு தள்ளிப்போட்டே நாட்கள் ஓடிடிச்சு.. கடைசியில் எப்படியும் எடுத்தே ஆகவேண்டிய நாள் வந்ததும் பிரதிபலிப்புன்னா நினைவுக்கு வந்தது அடுப்படியில் பாத்திரம் பிரதிபலிக்கறது தான்.. சரிதான் அதுலயே இதுவரை வேலைக்காரங்களிடம் போட்டு கீறல் விழாத பாத்திரமா எடுத்து மெதுவா தண்ணீரில் அலசி வெயிலில் காயவச்சு எடுத்தாச்சு..



எதுக்கும் இருக்கட்டுமே என்று புதுசா போட்ட க்ரானைட் அலமாரிக்கும் ஒரு விளம்பரம்.. ஆகா என்ன பளபளப்பு பாருங்க ...


முதல் இரண்டு படங்களும் மார்ச் மாதப்புகைப்படப் போட்டிக்கு .

Thursday, February 7, 2008

வட்டம் - மணிகள்

ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.
இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில் எடுக்கப்பட்ட படம்.


தனித்தனியாக விமர்சனம் கிடைப்பது வேறு ஆர்வம் அதிகமாக்குகிறது.


கணிதம் போட உதவும் அபாக்கஸ் வட்டமணிகள்.




தோடுகளும் கழுத்தணியும் செய்ய உதவும் மணிகள்.
பிக்ஸ்ல் குழப்பம் தான் இன்னமும் நிறைய இருக்கு..
நான் எடுக்கும் போது 1152 x864 ல் எடுப்பதா செட் செய்திருந்தேன் . இப்ப பதிவில் ஏத்திட்டுப் பார்த்தா 500 பக்கத்துல தான் காட்டுது.. ஹ்ம்.. :(
இங்கே சில வேறுவிதமான முயற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,

Tuesday, January 15, 2008

ஜனவரி புகைப்படப்போட்டிக்கு ...

தினம் என்ன நிமிடங்களுடன் கூட இணைந்தே இருக்கும் இந்த கருப்புகுதிரை....


விளக்கு அதுவும் அலங்கார விளக்கு என்றால் ஒருமயக்கம் தான். இந்தமாதப்போட்டிக்காக தனியாக எடுக்க இயலவில்லை. முன்பே ஒரு முறை இப்படிப்பட்ட அலங்கார விளக்கு உறவினருக்காக வாங்க சென்ற போது எடுத்த இந்த புகைப்படம் மிகவும் பிடிக்கும் .


கணினி பழுதாகி கடைக்கு சென்று இப்போது தான் வந்திருக்கிறது என்பதால் பிற்தயாரிப்பு செய்ய அறதபழசான போட்டோஷாப் 4 வெர்ஷன் கூட திருப்பி டவுன்லோட் செய்ய இயலாமல் அப்படியே எடுத்து படங்களை இங்கே இடுகிறேன்..

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers