Monday, November 10, 2008

அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்!!



சிறுமுயற்சி கங்கா ஆரத்தி பதிவில் இந்த அழகான பெண்ணைப்பற்றி எழுதியதும் எல்லாரும் படம் ஏன் போடலன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க..ரொம்ப ஆர்வப்படுத்திட்டு நல்லா இல்லன்னா என்ன பண்ரதுன்னு பயம் . ஆனா எடுத்த விதம் வேண்டுமானால் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே தவிர அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள். தேர்ந்த ஒரு மாடலைப்போல ஆடாமல் அசையாமல் புன்னகையும் மாறாமல் இருந்தாள். விளக்கு வாங்கி விடவேண்டும் என்று மகள் ஆசைப்பட்டபோது அந்த பெண்ணிடமே வாங்க விரும்பினேன் . ஒரு நன்றி தான். ஆனால் அவளைவிட சிறுவன் ஒருவன் இருந்ததால் அவள் அவனிடம் வாங்கும்படி சொன்னாள். எனக்கு அதன் பின்னர் திருப்தியாக இல்லை. பின்னர் மகனுக்காக வாங்கும்போது தேடிப்போய் அவளிடமே வாங்கினேன்.

ஒரு வெளிநாட்டவர் ஒரு பெண்மணியை புகைப்படமெடுக்க முயன்றார். அந்த பெண்மணி உடனே சரியாக அமர்ந்து கொண்டார். உடனே அவர் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு சிரித்தார். " நோ நோ நாட் லைக் திஸ் " என்று முன்பு தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்தமர்ந்த அவளைப்போல நடித்துக்காண்பித்து அதேபோல் அமர்ந்ததும் படம் எடுத்து சென்றார். அவர் சென்றபின் வெகுநேரம் வெக்கச்சிரிப்புடனே இருந்தார்கள் அந்த பெண்மணி.






இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். அவர் வெறெங்கோ பார்க்கும்போது சட்டென்று எடுத்துவிட்டேன். அவர் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பிப்பது போல் இருந்தது ஓடிவந்துவிட்டேன். பாருங்கள் வெறெங்கோ பார்ப்பது போல ஆனால் புகைப்படத்துக்கு நேராகத்தான் தலையை வைத்திருக்கிறார். படம் எடுத்துவிட்டு காசு கொடுப்பார்களா இருக்கலாம். அது இன்னமும் எனக்குப் பழக்கமாகவில்லை.

Wednesday, November 5, 2008

காசிக்கு போய் பதிவெழுதுவதை விட்டுவிடவில்லை





காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்று நான் பதிவெழுதுவதை விட்டுவிட்டேனென்று தமிழ்பிரியன் கிளப்பிக்கொண்டிருக்கும் புரளி தான் அவசரமாக இப்பதிவினை எழுதத்தூண்டியது. காசி அலகாபாத் செல்லும் பயணத்தை ஒரு புகைப்படப்பயணமாக நினைத்துக்கொண்டு என் ஸ்டேட்டஸ் மெஸேஜாகக் கூடப் போட்டுவைத்திருந்தேன். சிவி ஆர் மட்டும் தான் அடிக்கடி புகைப்படப் பயணம் போவாரா? நாங்களும் போவோம்ல..

ஆனா எனக்கு ஒரு முறை போட்டோ எடுக்க வாய்ப்பு தா என்று கேட்டுகொண்டே சின்னக்கேமிரா மேனும் அடம்பிடிப்பதால் சமாளித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வீடியோ வாக நிறைய எடுத்துவிட்டதும் புகைப்படங்கள் அதிகம் எடுக்காததற்கு காரணம்.
கையோடு நிறைய காலி சிடிக்கள் இருந்ததால் வீடியோ எடுக்கும் ஆசை அதிகமாகிவிட்டது.

வீடியோவை எடுத்து முடித்தவுடன் அது சேமிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பொறுமையாக காத்திருக்காமல் அவசரப்பட்டு போட்டோவுக்கு மாற்றுவதால் எடுத்த பகுதிகள் சில வற்றை இழக்க நேரிடும் என்பதை இப்பயணத்தில் புரிந்து கொண்டேன்.
இரவில் படம் எடுக்கும் போது பயன் படுத்த என்று "நைட் ஷாட் ப்ளஸ் " என்ற ஒரு பட்டன் இருப்பதையும் இம்முறை தான் பயன்படுத்தினேன்.




சாதுக்களின் நகரத்திற்குப் போய்விட்டு சாதுவைப் புகைப்படமெடுக்காவிட்டால் எப்படி? கங்கைக்கரையில் ஒரு சாது.
அவ்வப்போது இங்கே சில படங்களை பதிவிடுகிறேன்.

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers