Tuesday, December 11, 2007

இது எந்த செடியில் பூத்தபூ?

மூன்றுவிதமா எடுத்திருந்தாலும் எல்லாம் ஒரே பூங்கொத்துதான்.. எந்த செடியில் பூத்தப்பூ சொல்லுங்கப்பூ பாக்கலாம்.

எத்தனையோ விதமான பூ படம் வந்திருக்கும் இந்த பூப் படம் வந்திருக்கா போட்டிக்கு ?

இந்த வெள்ளைப்பூவும் முதல் படமும் டிசம்பர் மாத புகைப்படபோட்டிக்கு...

27 comments:

நாகை சிவா said...

முதல் பூ என்ன பூ????

வாழ்த்துக்கள் :)

பாறைக்கு நடுவில் இருக்கும் பூவை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்

முத்துலெட்சுமி said...

வேற யாராவது சொல்றாங்களா பாக்கறேன் அப்பறமா சொல்றேன்.. சரியா? பாறை நடு பூ எடுக்கவேண்டிய போஸ் எந்த மாதிரின்னு சொல்லிடுங்களேன்ன்

துளசி கோபால் said...

பாறை நடுவில் இருக்கும் பூவை நாங்க 'தலைவெட்டிப் பூ'ன்னு சொல்வோம். அதப் பறிச்சு கட்டைவிரல் & ஆள்காட்டி விரல் நகங்களுக்கிடையில் வச்சு வலதுகை
கட்டைவிரல் & நடுவிரல் மடிச்சு வளையமாக்கி ஒரு சுண்டு சுண்டினா பூ தூரமா எகிறி விழும்:-)))))

முதல் பூ பெயர் தெரியலை.

ஆனா நல்லா இருக்கு.

ஒப்பாரி said...

பிற்தயாரிப்பு செய்து பார்திருக்கீங்க வாழ்த்துக்கள், பெயரும் சேர்த்திருக்கலாமே. முயற்சி செய்து பாருங்கள்.

ஆயில்யன் said...

//பாறைக்கு நடுவில் இருக்கும் பூவை //

என்னது பாறையா.?

அது எங்க ஊருல கருங்கல் ஜல்லின்னுல்ல சொல்லுவோம் :))

முத்துலெட்சுமி said...

சரியாச்சொன்னீங்க துளசி ... ஆனா முதல் பூ இருக்கே அது ஒரு சீசனுக்கு மட்டும் ஒரு முறை தான் வருகிறது..முன்னர் எங்கும் பார்த்ததே இல்லை அந்த செடியில் பூபூக்கும் என்று..என் வீட்டிலே யே பூத்த போது தான் ..நீங்க முன்னர் ஒரு முறை இது என்ன செடி போட்டி வைத்த நியாபகம் அடுத்த முறை பூக்க்கும் போது போடலாம் என்று காத்திருந்தேன் டிசம்பர் போட்டி சரியான வாய்ப்பாகியது. ஆனா படம் எடுக்க அப்படி இப்படி மாற்றியதில் பெரிய தண்டு உடைந்துவிட்டது :(

முத்துலெட்சுமி said...

ஆமா ஒப்பாரி பேரு போட மறந்துட்டேன்..ஆனா எப்படியோ இந்த தடவை நானேபார்டர் போடனும்ன்னு போட்டுட்டேன்...:)

முத்துலெட்சுமி said...

ஆமா ஆயில்யன் கரெக்டா சொல்லிட்டீங்க.. அது ஜல்லியேதான்..
ரயில் தண்டவாளத்துல போட்டிருந்த ஜல்லிக்கு நடுவில் வளர்ந்திருந்ததாக்கும் அந்த பூ..

துளசி கோபால் said...

பாறையை உடைச்சா அது ஜல்லி.
ஜல்லியை உடைச்சா அது பாறையாகுமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முதல் பூ கற்றாளம்பூ, இரண்டாவது தெரியவில்லை. மூன்றாவது -ஊமத்தம்பூ

இந்தக் கற்றாளம்பூ வதக்கிக் குழம்புவைத்தால் மறக்கமாட்டீர்கள்.
ஊமத்தமிலை மூலவியாதிக்கு வாட்டித் தடவும்படி, ஆயுள்வேத வைத்தியர்கள் கூறுவார்கள்.

இரண்டாம் சொக்கன் said...

கொஞ்சம் கொஞ்சமா ஒளி ஓவியராய்ட்டு வர்றீங்க....

வாழ்த்துக்கள்...

பாச மலர் said...

முதல் பூ பெயர் கட்டிப் போட்டா குட்டி போடும்..என்று சொல்வார்களே அந்தப் பூவா?

அந்த ஜல்லி மேல் இருந்த பூவை தாத்தா பூ என்போம் நாங்கள்...கழுத்து அவ்வளவு strong ஆக இல்லாததால்..

முள்ளும் மலரும் போல் இது கல்லும் மலரும்...

படங்கள் நன்றாக இருக்கின்றன...

delphine said...

what is the name of that flower?

முத்துலெட்சுமி said...

\\துளசி கோபால் said...
பாறையை உடைச்சா அது ஜல்லி.
ஜல்லியை உடைச்சா அது பாறையாகுமா?//

ஆகா துளசி என்ன இது ? பாவம் நான்...

முத்துலெட்சுமி said...

யோகன் சரியா கண்டுபிடிச்சீங்க.. சரிதான் அதை சமைக்கலாமா தெரியாதே . கொஞ்சம் சமையல் ரெசிப்பி சொல்லிடுங்களேன் ப்ளீஸ்.. உடைச்ச பூவை என்ன செய்யறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்..

முத்துலெட்சுமி said...

பாசமலர் கற்றாழை கட்டி போட்டா அப்படியே வாடாம இருக்கும் ஆனா குட்டி போடுமா தெரியாதே..
ஆனா ஒன்னு வச்சா அடுத்தடுத்து வந்துடும்..
வர்ணனை நல்லா செய்திருக்கீங்க நன்றி.ஆமா நாங்களும் தாத்தா பூ தான் சொல்லுவோம்.. தாத்தா தாத்தா சட்டை வாங்கிதரயான்னு கேட்டுட்டு டக் குன்னு தூக்கிடுவாங்க பூவை தண்டிலிருந்து ..

முத்துலெட்சுமி said...

டெல்பின் மேடம் அது யோகன் சொல்லிட்டார் பாருங்க எங்கவீட்டு தொட்டியில் கற்றாழை செடியில் பூத்தபூவாக்கும்..

பாச மலர் said...

ஒருவேளை grafting பதியன் போடுவதைத்தான் கட்டிப் போட்டா குட்டி போடும் என்று சொல்லி இருப்பார்களோ என்னவோ..தெரியவில்லை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுமார் 40 வருடங்களுக்கு முன் சாப்பிட்டதும், அதைத் தயார் செய்கையில் பார்த்ததையும் கூறுகிறேன்.
இந்த மொட்டுகள், பூவில் அடிப்பாகத்தை திருகினால் மகரந்தக் காம்பு தனியாக வரும் பூமடல்களை
எடுத்து (பயற்றங்காய் போல்) எண்ணெயில் வதக்கவேண்டும்.
பின் அளவான வெங்காயம்,கடுகு,சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்து மிளகாய்த் தூள்
அளவாகப் போட்டு புளிக்கரைசல் விட்டு குளம்புக்கூட்டு தாயாராகிக் கொதித்ததும் வதக்கிய பூமடலைக் கொட்டி அளவான உப்புமிடவும்.
பின் குழம்பு வற்றிவரும் போது அளவான தேங்காய்ப்பால் விட்டுக் கலக்கி கறி தடித்து வரும் போது இறக்கவும்.கிட்டத்தட்ட கத்தரிக்காய்,பயத்தங்காய் வதக்கல் குழம்பு போல்..இது ஈழத்துச் செய்முறை...
( என் பேத்தியார் {அம்மம்மா}கேட்டபோது கற்றாளம்பூ பிடிங்கிக் கொடுத்துவிட்டு, என்ன நடந்தது என்பதை என் நினைவுக்குக் கொண்டுவந்து சொல்கிறேன்.)
அந்தக் குழம்பு இத்தனை வருசமாகியும் என்னால் மறக்க முடியாதது.
அழகும்,சுவையும் மிக்க வாழ்க்கையை
இழந்து விட்டோம்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

SurveySan said...

not upto some of the good ones i saw earlier :)

still didnt buy a digi cam?

:)

முத்துலெட்சுமி said...

இரண்டாம் சொக்கன் நன்றி.. எடுக்கும் முறையிலோ எடுக்கற விசயத்திலோ மாற்றம் செய்ய முடியுது ஆனா கிளியரா வர்ரதுக்கு தான் ஒன்னும் செய்ய முடியல..இது ஃபோன் கேமரா

முத்துலெட்சுமி said...

இருக்கலாம் பாசமலர்.. சும்மா ஒரு செடிவச்சா குப்புன்னு தொட்டிய உடைச்சுக்கிட்டு வளர்ந்து எக்கச்சக்கமாகிடுச்சு இப்ப..

------

யோகன் நன்றி நல்ல குறிப்பு.. உண்மைதான் இவை எல்லாம் உங்களுக்கு ஊர் ஞாபகங்களை கிளறிவிடுமே...

----------

ந்ன்றி கோபிநாத்

-----
சர்வேசன் இன்னம் ஒரு கேம்ராவா .. கஷ்டம் தான்.. முதன் முதல்ல வாங்கின ஆயிரம் ரூ பாய்க்கேமரா ல இருந்து அப்பறம் ஜூம் கேமரா வேணும்ன்னு பெரிய பெண்டக்ஸ் வாங்கியாச்சு அப்பறம் வீடியோ டிஜிட்டல் கேம்ரா அப்பறம் என் சீரீஸ் போன் கேமரா இன்னம் ஒன்னு கேட்டா தொரத்தி உட்டுருவாங்க ...பாக்கலாம்..காதுல போட்டுவைக்கிறேன்.

rj said...

முதலில் உள்ள பூ சோற்று கற்றாழையில் ( Alovera) பூக்கும் பூ. seasonல்லாம் இல்லை. செடிக்கு ஒரு முறைதான் பூக்கும்.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆர்.ஜே.. நன்றிங்க்..ஒரு பெரிய தொட்டியில் எக்கசக்கமா முளைத்துக்கிடப்பதால் எதுல பூத்ததுன்னு பாக்கல.அப்படி பாத்திருந்தாத்தானே நீங்க சொல்ராப்ப்ல இது போன வருசம் பூத்த செடி இல்லன்னு தெரியும்.. :))

பழமைபேசி said...

சாணிப் பூட்டான் பூவோட புகைப் படத்துக்கு நன்றிங்க!
உங்களால முடிஞ்சா, மப்பூட்டான், நாயுருவி புகைப் படம் கிடைக்கப் பெற முடியுங்ளா? சித்த புண்ணியமாப் போகும்!!

பழமைபேசி said...

//துளசி கோபால் said...
பாறையை உடைச்சா அது ஜல்லி.
ஜல்லியை உடைச்சா அது பாறையாகுமா?
//

ஜல்லிய ஒடச்சா ஆவுறது சுக்கு!

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers