ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு
போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.
இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில் எடுக்கப்பட்ட படம்.
தனித்தனியாக விமர்சனம் கிடைப்பது வேறு ஆர்வம் அதிகமாக்குகிறது.

கணிதம் போட உதவும் அபாக்கஸ் வட்டமணிகள்.
தோடுகளும் கழுத்தணியும் செய்ய உதவும் மணிகள்.
பிக்ஸ்ல் குழப்பம் தான் இன்னமும் நிறைய இருக்கு..
நான் எடுக்கும் போது 1152 x864 ல் எடுப்பதா செட் செய்திருந்தேன் . இப்ப பதிவில் ஏத்திட்டுப் பார்த்தா 500 பக்கத்துல தான் காட்டுது.. ஹ்ம்.. :(
இங்கே சில வேறுவிதமான முயற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,

