Thursday, February 7, 2008

வட்டம் - மணிகள்

ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.
இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில் எடுக்கப்பட்ட படம்.


தனித்தனியாக விமர்சனம் கிடைப்பது வேறு ஆர்வம் அதிகமாக்குகிறது.


கணிதம் போட உதவும் அபாக்கஸ் வட்டமணிகள்.
தோடுகளும் கழுத்தணியும் செய்ய உதவும் மணிகள்.
பிக்ஸ்ல் குழப்பம் தான் இன்னமும் நிறைய இருக்கு..
நான் எடுக்கும் போது 1152 x864 ல் எடுப்பதா செட் செய்திருந்தேன் . இப்ப பதிவில் ஏத்திட்டுப் பார்த்தா 500 பக்கத்துல தான் காட்டுது.. ஹ்ம்.. :(
இங்கே சில வேறுவிதமான முயற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,

18 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

ஆஹா...

கொடுத்துவச்ச மகராசி...இப்படி அனுபவிச்சி அனுபவிச்ச்சி எடுத்திருக்கீங்க...நல்லாருக்கு....

என்னை மாதிரி ஓடீட்டே படமெடுக்கறவனெல்லாம் இங்க வரவே கூடாது போல...ஹி..ஹி..

அப்பால ஒரு டவுட்...

வட்டமும் உருண்டையும் ஒன்னா?....ஹி..ஹி....

முத்துலெட்சுமி said...

நல்ல கேள்வி.. ஒரு உருண்டையை நீங்க அப்படியே வரைஞ்சா வட்டம்.. 3 டி ல வரைஞ்சா உருண்டை.. புரியுதா எதாவது..

மங்கை said...

சொக்கர் பாரு Tit for Tat விளையாட்டு விளையாடுறார்...

எல்லாமே நல்லாருக்குப்பா....கோலி எல்லாம் விளையாடுவீங்களா
சொல்லவே இல்ல.....:-))

nathas said...

nice pics... :)
If you had a dark background for the second pic, it would have been better... my humble opinion....

முத்துலெட்சுமி said...

மங்கை அது தோடு கழுத்துக்கு பாசி செய்யறதுக்கு உள்ள மணிகள் நடுவில் துளை இருக்கு பாருங்க.... கோலி எல்லாம் விளையாடி இருக்கோம் ஆனா சிமெண்ட் தரையில் சும்மா ...

முத்துலெட்சுமி said...

nathas ரொம்ப நன்றிங்க... செய்து பாத்துடறேன், டார்க் பேக்ரவுண்டலயும்.. நீங்கள்ளாம் சூப்ப்பரா படம் எடுக்கறவங்க ஆச்சே..

A n& said...

முத்துலெட்சுமி,
படங்களின் தரம், எடுக்கும் நேர்த்திகளில் உங்களின் பழைய படங்களில் இருந்து இதில் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. வாழ்த்து.

துளசி கோபால் said...

சூப்பர்.

கட்டத்துள் வட்டம்.

வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

cheena (சீனா) said...

கோலி விளையாடினீங்களா - நம்ப முடியலே - பாண்டி தானே ஆடுவீங்க

கோபிநாத் said...

படங்கள் எல்லாம் நல்லாயிருக்கு...ஆனா வெளிச்சம் அதிகம்ன்னு நினைக்கிறேன்.

கடைசி கோலி படம் சூப்பர் ;)

ஒப்பாரி said...

கட்டம் கட்டியாச்சு அடுத்து மெதுவா பிற்தாயாரிப்பு ஒவ்வொன்றாக செய்துபாருங்கள், முதல் படத்தில் brightness and contrast adjust செய்தால் background bleach ஆகி இன்னும் சிறப்பா வரும்னு நினைக்கிறேன். மத்தபடி படங்கள் நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி said...

\\A n& said...
முத்துலெட்சுமி,
படங்களின் தரம், எடுக்கும் நேர்த்திகளில் உங்களின் பழைய படங்களில் இருந்து இதில் நிறைய முன்னேற்றம் இருக்கிறது.//

இதுக்குத்தானே அத்தனபாடு.. ரொம்ப நன்றி.. ரொம்ப நன்றி..

முத்துலெட்சுமி said...

துளசின்னாலே வார்த்தை விளையாட்டு தானே.. கட்டத்துல் வட்டமா .. கட்டம் எங்கன்னு ஒரு நிமிசம் யோசிச்சிட்டு இருந்தேன்.... ஓ கட்டம் கட்டிய பார்டரா ஓகே ஒகே..

முத்துலெட்சுமி said...

சீனா பாண்டி யும் பசங்க விளையாடுவாங்க.. எங்க கூட சின்னவயசில் இது பெண்கள் விளையாட்டு ஆண்கள் விளையாட்டு என்று இல்லை.. ஒரு காலனியில் இருப்பதில் எல்லாரும் கலந்து எல்லாமே விளையாடுவது தான்.. பம்பரம் கூட விடுவோம்..

முத்துலெட்சுமி said...

ஒப்பாரி நன்றி.. செய்து பாக்கறேன்.. எனக்கென்னவோ போஸ்ட் ப்ரொடக்ஷன் பண்ணதுல தப்பு இருந்திருக்குமோ என்னவோ என்று தோணுது அதிக லைட்டிங்க் அதுனால வந்துருக்கலாம்.. இன்னும் பழகணும்..

குசும்பன் said...

அருமையாக இருக்கு பளிங்கி!!!

goma said...

மொத்தமாக அத்தனை படங்களையும் பார்த்து ரசித்தபின் எழுதுகிறேன் .கண்ணாடியில் கொத்தும் குருவியை நீங்கள் கொத்தியது அழகு,பாத்திரங்களை அடுக்கி வைத்து ரங்கனாதன் ஸ்ட்ரீட்டுக்கு அழைத்துச் சென்றது அருமை.....தில்லியில் [இடம் தெரியாது]காந்தி நேரு ....என்று வரிசையாக நிற்பது போல் ஒரு சிற்பம் ,அதை உங்கள் செல் கேமராவினால் செதுக்கிப் போடுங்களேன்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நன்றி குசும்பன் ..
நன்றி கோமா .. அது என்ன இடம் தெரியலயே.. எனக்கு.. சரி எடுத்துடலாம் விசாரிச்சு.. ;)

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers