சிறுமுயற்சி கங்கா ஆரத்தி பதிவில் இந்த அழகான பெண்ணைப்பற்றி எழுதியதும் எல்லாரும் படம் ஏன் போடலன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க..ரொம்ப ஆர்வப்படுத்திட்டு நல்லா இல்லன்னா என்ன பண்ரதுன்னு பயம் . ஆனா எடுத்த விதம் வேண்டுமானால் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே தவிர அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.
அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள். தேர்ந்த ஒரு மாடலைப்போல ஆடாமல் அசையாமல் புன்னகையும் மாறாமல் இருந்தாள். விளக்கு வாங்கி விடவேண்டும் என்று மகள் ஆசைப்பட்டபோது அந்த பெண்ணிடமே வாங்க விரும்பினேன் . ஒரு நன்றி தான். ஆனால் அவளைவிட சிறுவன் ஒருவன் இருந்ததால் அவள் அவனிடம் வாங்கும்படி சொன்னாள். எனக்கு அதன் பின்னர் திருப்தியாக இல்லை. பின்னர் மகனுக்காக வாங்கும்போது தேடிப்போய் அவளிடமே வாங்கினேன்.
ஒரு வெளிநாட்டவர் ஒரு பெண்மணியை புகைப்படமெடுக்க முயன்றார். அந்த பெண்மணி உடனே சரியாக அமர்ந்து கொண்டார். உடனே அவர் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு சிரித்தார். " நோ நோ நாட் லைக் திஸ் " என்று முன்பு தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்தமர்ந்த அவளைப்போல நடித்துக்காண்பித்து அதேபோல் அமர்ந்ததும் படம் எடுத்து சென்றார். அவர் சென்றபின் வெகுநேரம் வெக்கச்சிரிப்புடனே இருந்தார்கள் அந்த பெண்மணி.
இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். அவர் வெறெங்கோ பார்க்கும்போது சட்டென்று எடுத்துவிட்டேன். அவர் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பிப்பது போல் இருந்தது ஓடிவந்துவிட்டேன். பாருங்கள் வெறெங்கோ பார்ப்பது போல ஆனால் புகைப்படத்துக்கு நேராகத்தான் தலையை வைத்திருக்கிறார். படம் எடுத்துவிட்டு காசு கொடுப்பார்களா இருக்கலாம். அது இன்னமும் எனக்குப் பழக்கமாகவில்லை.