Monday, November 10, 2008

அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்!!சிறுமுயற்சி கங்கா ஆரத்தி பதிவில் இந்த அழகான பெண்ணைப்பற்றி எழுதியதும் எல்லாரும் படம் ஏன் போடலன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க..ரொம்ப ஆர்வப்படுத்திட்டு நல்லா இல்லன்னா என்ன பண்ரதுன்னு பயம் . ஆனா எடுத்த விதம் வேண்டுமானால் இன்னும் நல்லா இருந்திருக்கலாமே தவிர அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள். தேர்ந்த ஒரு மாடலைப்போல ஆடாமல் அசையாமல் புன்னகையும் மாறாமல் இருந்தாள். விளக்கு வாங்கி விடவேண்டும் என்று மகள் ஆசைப்பட்டபோது அந்த பெண்ணிடமே வாங்க விரும்பினேன் . ஒரு நன்றி தான். ஆனால் அவளைவிட சிறுவன் ஒருவன் இருந்ததால் அவள் அவனிடம் வாங்கும்படி சொன்னாள். எனக்கு அதன் பின்னர் திருப்தியாக இல்லை. பின்னர் மகனுக்காக வாங்கும்போது தேடிப்போய் அவளிடமே வாங்கினேன்.

ஒரு வெளிநாட்டவர் ஒரு பெண்மணியை புகைப்படமெடுக்க முயன்றார். அந்த பெண்மணி உடனே சரியாக அமர்ந்து கொண்டார். உடனே அவர் புகைப்படமெடுப்பதை விட்டுவிட்டு சிரித்தார். " நோ நோ நாட் லைக் திஸ் " என்று முன்பு தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்தமர்ந்த அவளைப்போல நடித்துக்காண்பித்து அதேபோல் அமர்ந்ததும் படம் எடுத்து சென்றார். அவர் சென்றபின் வெகுநேரம் வெக்கச்சிரிப்புடனே இருந்தார்கள் அந்த பெண்மணி.


இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். அவர் வெறெங்கோ பார்க்கும்போது சட்டென்று எடுத்துவிட்டேன். அவர் என்னை முறைத்துப்பார்க்க ஆரம்பிப்பது போல் இருந்தது ஓடிவந்துவிட்டேன். பாருங்கள் வெறெங்கோ பார்ப்பது போல ஆனால் புகைப்படத்துக்கு நேராகத்தான் தலையை வைத்திருக்கிறார். படம் எடுத்துவிட்டு காசு கொடுப்பார்களா இருக்கலாம். அது இன்னமும் எனக்குப் பழக்கமாகவில்லை.

32 comments:

ராமலக்ஷ்மி said...

அவளின் கண்களிலும் உதட்டிலும் மின்னும் சின்னபுன்னகை அழகுதான் அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை.

அழகோ அழகு.

சாமியாரின் கவனத்துக்கு கவனமாய் டிமிக்கி கொடுத்து விட்டு சரியான நேரம் பார்த்து க்ளிக்கிய சாமர்த்தியத்துக்குப் பாராட்டுக்கள்:)))!

மூன்றாவது படத்தின் கோணமும் அதில் தீபமும் மலர்களும் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழில் புகைப்படக்கலை வகுப்பில் கலக்கும் ராமலக்ஷ்மியே வந்து பாராட்டுறாங்கன்னா.. மகிழ்ச்சி நன்றி நன்றி.:)

சந்தனமுல்லை said...

அழகு..வசீகர புன்னகை..நல்லா இருக்கா...அனத் பொண்ணு..போட்டோஸ் சூப்பர்! அனத் சாமியார் பயமுறுத்தறார்! :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாத்தீங்களா முல்லை.. போட்டோல பார்த்ததுக்கே நீங்க பயந்து போய் அந்தன்னு போட அனத் ன்னு அடிச்சிருக்கீங்க..எத்தனை தைரியமா அப்ப நான் படமெடுத்திருப்பேன்.. :)

கிரி said...

//அவளைத்தான் நான் புகைப்படமெடுக்கிறேன் என்று தெரிந்ததும் ஒரு விதப் பெருமையோடு சிரித்துக்கொண்டாள்//

நீங்கள் கூறுவது சரி தான் என்று படம் பார்க்கும் போது தெரிகிறது :-)

//இவரைப்படம் எடுக்க எனக்கு பயமாக இருந்தது. அவரும் அவ்வப்போது கவனித்துக்கொண்டு தானிருந்தார். //

அட! ஆமாங்க அவரு ஓர கண்ணுல பார்க்குறாரு ஹி ஹி ஹி

இந்த இரண்டு படமும் பக்காவா இருக்குங்க :-)

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

சாமியார் பார்க்காததுபோல பார்க்கிறார்:-))))

Anonymous said...

அழகுன்னா இது அழகு.. :)

Unknown said...

ரொம்ப அழகா இருக்கு அக்கா படங்கள் எல்லாமே.. :)) சாமியார் நிஜமாவே பயமுறுத்தறார்.. நீங்க தைரியசாலி தான்.. :)))

சென்ஷி said...

படங்கள் நல்லாயிருக்குதுக்கா!

ஆயில்யன் said...

கலக்கல் போட்டோஸ்க்கா!

அதுவும் மெல்லிய புன்னகையுடன் சிறுமி!

கவனம் மாறிய சாமியார்

(பொதுவாவே புகைப்படம் எடுத்தால் எல்லாருமே பயப்படறது எதாச்சும் சொல்லுவாங்களோ அப்படின்னுத்தான் பட் நிறைய பேர் ரொம்ப விருப்பமா போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்கங்கறது நிதர்சனம்!)

ஆயில்யன் said...

அக்கா இப்ப உங்களுக்குள்ள ஒரு புரொபொஷனல் கூரியர், ரன்வேயிலேர்ந்து டேக் ஆப் ஆக ஆரம்பிச்சிட்டாரு

வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி படம் எடுத்து முடிச்சதும் அவரு கவனிச்சு எதோ தலைய ஆட்டி மிரட்டினாப்பலயே இருந்தது.. நான் உங்களையா எடுத்தெங்கறமாதிரி அப்படியே கங்கைய ..அபவுட் டேர்ன் பண்ணிட்டேனாக்கும்...:)
----------------
துளசி முதல்ல அவரு நடந்துட்டுருந்தார் அப்பலேர்ந்தே எடுக்க முயற்சி செய்திட்டிருந்தேன்.. பின்னால அழகா உக்காந்தார் போகஸ்லயே இந்த மிரட்டுன்னா பக்கத்துல போய் எடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தூயா.. உங்க பேரைப்போலவே இந்த பெண்ணோட அழகு இல்லையா.. :)
---------------
ஸ்ரீமதி நன்றிப்பா...
ஆமா தைரியசாலி .. மிரட்டினா தெரிஞ்சுரும் ..
வேணாம்... வேணாம் ..அழுதுருவேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி நன்றிப்பா..
-----------------
ஆயில்யன் உண்மைதான் ஆனா யாரு திட்டுவா யாரு சந்தோஷப்படுவான்னு தெரியாதே.. ஒரு குழந்தை அவங்க தாத்தாவோட அழகா விளையாண்டுச்சு கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து எடுக்க ட்ரை செய்துட்டிருந்தப்ப ஒரு அம்மா குறுக்க வந்து நின்னுடுச்சு ஆனா அதே நேரம் ஒரு வெளிநாட்டுக்காரர் சரியா க்ளிக் செய்துட்டு அதை அந்த தாத்தாக்கிட்ட காட்டினார் அவரு பூரிச்சு போயிட்டார்.. ஹ்ம்..

கூரியர் கம்பெனி நல்லா ஓடுறதுக்கு ந்ல்ல கேமிரா அவசியம் இல்லாட்டி இப்படியே பெட்டிக்கடையா இருக்கவேண்டியது தான்.

Namma Illam said...

அக்கா! படமெல்லாம் சூப்பர்.. அந்த பொண்ணு படம் அழகா எடுத்து இருக்கீங்க.. :)

Namma Illam said...

///ஆயில்யன் said...
/
அக்கா இப்ப உங்களுக்குள்ள ஒரு புரொபொஷனல் கூரியர், ரன்வேயிலேர்ந்து டேக் ஆப் ஆக ஆரம்பிச்சிட்டாரு

வாழ்த்துக்கள் :)////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

நசரேயன் said...

எல்லா படமும் அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் நன்றி நன்றி:)

----------------
நசரேயன் நன்றிங்க.. :)

லெனின் பொன்னுசாமி said...

ரொம்ப அழகு முக அக்கா.:)


நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முக :) நல்லாருக்கு.. யாரும் கட்சிக்காரங்க சண்டைக்கு வராம இருந்தா சரி..
நன்றி லெனின்.

Unknown said...

நல்ல புகைப்படங்கள்

Subha said...

போட்டோக்கள் அருமை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிரபு ,சுபாஷினி நன்றிங்க... :)

Muruganandan M.K. said...

சின்னப் பெண்ணின் மென்னகை காட்டில் இயல்பாய் பூத்திருக்கும் மலர்களை நினைவூட்டுகிறது.
நீங்கள் டிமிக்கி கொடுத்தாலும் சாமியார் கள்ளப் பார்வையால் அவதானிக்கிறார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி டாக்டர்... நீங்க சொன்னது நல்லதொரு உவமை தான்..

மாதேவி said...

நல்ல படங்கள். நல்ல பதிவு

Gemel said...

Beautiful photos. Thank you for your lovely words on my blog, I am pleased that your receive such joy from my words..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மாதேவி..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thanks for your visit and comment gemel.. :)

Glennis said...

Nice photos, The holy man is very good.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

hi glennis .. thankyou for your comment :)

cheena (சீனா) said...

ஒரு பொண்ணப் படமும் எடுத்துட்டு அதுக்கு ஒரு இடுகையும் போட்டாச்சு - பலே பலே - காங்கா ஆர்த்தி ஏழு பேரும் 30 / 45 நிமிசம் தூள் கெளபீட்டாங்க - இதெல்லாம் வாழ்க்கையிலெ ஒரு தடவயாவது பாத்துடணும். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers