
முதலில் அலைவந்து அழிக்க நினைக்கும் காட்சியைத்தான் போட்டிக்கு அனுப்ப எண்ணினேன்.. இது என் தம்பியின் கேமிராவில் எடுத்தது. கொஞ்ச நாட்களாகவே என் சாதா கேமிராவில் எடுப்பதை போட்டிக்கு அனுப்புவதில் மனதிற்கு சம்மதமில்லை. ;)

சமீபத்தில் தோழியின் மகளை தோழியின் கேமிராவால் படம் பிடித்துக்கொண்டிருந்தேன்..அதில் சிக்கிய சில கண நேரக்கண்ணாடிகள் அழகாக இருந்தபடியால் அவற்றில் முதல் சுற்று இரண்டாம் சுற்றுக்கு விட்டு தேர்ந்தெடுத்த போட்டிக்கான படம் கடைசியில் இருக்கிறது...
