
இது எங்கள் வீட்டு கிருஸ்துமஸ் மரம். பரிசு எல்லாம் அலங்காரம் தான்.உண்மையான பரிசு மகனுக்கு தாமஸ் த ட்ரயின் ஸ்டிக்கர் புக்.ஆங்கிலம் ஸ்மால் லெட்டர் எழுதப் பழகுவதற்கு... கிருஸ்மஸ் தாத்தா ராத்திரியே கொண்டுவந்து வச்சிட்டுப் போயிட்டாராம். :)

இது எங்க ஊரு ஷாப்பிங் மால் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்.உள் அலங்காரங்கள் ஸ்னோ மேன்.சாண்ட்டாவோட வீடும் வீட்டுக்குப் போகிற வழியும்...
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே என்ன ஒரு அழகான பாடல் இல்ல ..
மெர்ரி கிரிஸ்த்மஸ் :)
சபரி துணுக்ஸ் : பள்ளிக்கூடத்துல கிருஸ்துமஸ் பார்ட்டிக்கு கிளம்பறார்.
கிருஸ்துமஸ் தொப்பி போட்டுக்கோடா ..
நோ நான் என்ன தாத்தாவா? என்கிட்ட என்ன ஸ்லெட்ஜா இருக்கு .. சைக்கிள் தான் இருக்கு
இல்லடா பர்த்டே தொப்பி டா
ஓகே ஜீஸஸ் பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும் போது போட்டுக்கிறேன் பேக்லயே வைங்க ...