Friday, June 13, 2008

சர்பத் ஐஸ்காரர்

இந்தியா-பாக் பார்டரில் .. ஐஸ் குச்சியில் கலரை ஊத்தி வித்துக்கிட்டிருந்தார்.. அந்த இடத்தில் தான் எத்தனை தேசியப்பற்றுங்கறீங்க.. குச்சி ஐஸ் தொப்பின்னு அமோக விற்பனைதான்.. இது ஜூன் மாதப்போட்டிக்கு ...

18 comments:

இயற்கை நேசி|Oruni said...

அதான் இந்தப் படத்தை கையோட நோஷனல் ஜியோக்ராஃபிக்கு அனுப்பிச்சி வைச்சிடுங்க, மறந்துடாம. இந்தப் படத்தில எவ்வளவு லைஃப் இருக்கு :-).

இரண்டாம் சொக்கன்...! said...

இது இந்தியா பாகிஸ்தான் பார்டர்ன்னு நான் எப்படி நம்புறதாம்!

ஹி..ஹி..எனி ப்ரூஃப்

சென்ஷி said...

ச்சே ஜஸ்ட் மிஸ்ஸூ... :((

அதனாலென்னா மீ த செகண்டு :))

puduvaisiva said...

பாரத் மாதாஜ்கி ஜெ ஜெ ஜெ

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

புதுவை சிவா

சென்ஷி said...

சே... மறுக்கா தப்பாயிடுச்சு.. :((

மீ த ஃபோர்த் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நன்றி இயற்கை நேசி..
அவ்வளவு லைப் இருக்குன்னு சொல்றீங்களோ.. எவ்வளவு இருக்குன்னு கிண்டலோ .. :))
-----------
ஹா சொக்கரே என்கிட்டவே ப்ரூஃபா.. நான் தான் ஊரு சுத்தி காமிச்சேன்ல.. அமிர்தசரஸ் ஸ்பெஷல்ல தனியா வாகா பார்டருக்குன்னு தனியா ஒரு பதிவே போட்டேனே.. வயசு ஆகிடுச்சு உங்களுக்கு மறதி .. ஹ்ம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி கணக்கு தப்பாகிட்டே போகுதே.. பின்னூட்டதில் படத்தைப்பத்தி ஒன்னும் சொல்லலல்ல அதான் தப்பாகுது.. :)
-----------
ஆமாங்க சிவா.. ஒரேடியா அங்கயும் இதே கத்தல் தான் எல்லாரும்.. பாக் காரங்களும் கத்த சண்டை வராத குறை தான்..
நீங்க எந்த சிவா.. இங்க தமிழ்மணத்துல சிவாக்களுக்கு பஞ்சமே இல்ல..

Thamiz Priyan said...

படம் சுமார் தானக்கா... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்பிரியன் நானு துளசி எல்லாம் தமிழில் புகைப்படக்கலையில் கடைசி பெஞ்சுக்கு போட்டிப்போடறவங்க.. இல்லையா.. அதனால் தான்.. :))

ஆயில்யன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
தமிழ்ப்பிரியன் நானு துளசி எல்லாம் தமிழில் புகைப்படக்கலையில் கடைசி பெஞ்சுக்கு போட்டிப்போடறவங்க.. இல்லையா.. அதனால் தான்.. :))
//

அடையும் இலக்கினை விட,

ஆரம்பிக்கும் இடத்தில்,

எப்பொழுது நாம் உற்சாகமாக தயாராகி நிற்கிறோமோ.. அதுதான் சாதனை!

வாழ்த்துக்கள் அக்கா!


இது குச்சி ஐஸ்ன்னு சொல்லலாமா?

கிரி said...

//அந்த இடத்தில் தான் எத்தனை தேசியப்பற்றுங்கறீங்க.. குச்சி ஐஸ் தொப்பின்னு அமோக விற்பனைதான்//

நம்ம ஆளுங்க தான் பயங்கரமா யோசிப்பாங்களே :-))

என்னங்க இப்படி எல்லோரும் இப்படி போட்டு தாக்குனா ...என் படம் போட்டியில இருந்து தூக்கிட போறாங்க :-(( நானெல்லாம் போட்டிக்கு புதுசுங்க :-(

ராமலக்ஷ்மி said...

//ஐஸ் குச்சியில் கலரை ஊத்தி வித்துக்கிட்டிருந்தார்..//

எங்க மேடம் வித்திட்டிருக்கிறார்? சாம்பிள் ஐஸ் காமிச்சுகிட்டு அது உருகிடுமேனும், ஒரு போணியும் ஆகக் காணுமேனும் கவலையோட அல்லவா பாத்துட்டிருக்கார். அந்தப் பார்வை ஒன்றே போதும் படத்துக்க்கு லைஃப் தர.

ராமலக்ஷ்மி said...

// குச்சி ஐஸ் தொப்பின்னு அமோக விற்பனைதான்..//

அப்போ (படத்தை க்ளிக்கியதும்) அந்த அமோக விற்பனையே உங்களிடம்தான்னு :) சொல்லுங்க.
எத்தனை குச்சி எத்தனை தொப்பி?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதையும் புதுசா கத்துக்கிட்டு ஆரம்பிக்கற சாதனை அடிக்கடி செய்வது தான் ஆயில்யன்.. எதிலும் வெற்றிங்கற சாதனை செய்யறது தான் இல்லை..
-----------
கிரி ஏன் பயப்படறீங்க.. நம்ம படம் நல்லாருக்குமே தவிர .. கிளியரா இருக்காது அதுனால வெற்றிக்கனியையெல்லாம் தட்டிப்பறிச்சிட மாட்டேன்.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி ரொம்ப சரியா கண்டுபிடிச்சிட்டீங்க.. குச்சி ஐஸ் மட்டும் கொஞ்சம் டல்லாத்தான் வித்திட்ருந்தது..ஊருவிட்டு ஊருவந்து இதை சாப்பிட்டு எதாவது ஆகிடுமோன்னு பயந்துருப்பாங்களோ (பயந்திருப்பமோ??)

ஒரு ஆள் பக்கத்துல வந்து வாங்கற மாதிரி கேட்டதும் தான்... கலர்கலரா ஊத்திக்காட்டினதும் வாங்காம போயிட்டார்.. அப்ப எடுத்தது தான் இது..

கோபிநாத் said...

\கயல்விழி முத்துலெட்சுமி க்ளிக்கியது

சென்ஷி கணக்கு தப்பாகிட்டே போகுதே.. பின்னூட்டதில் படத்தைப்பத்தி ஒன்னும் சொல்லலல்ல அதான் தப்பாகுது..
\\

அக்கா இங்க அந்த சைட் எல்லாம் தடை செய்துட்டாங்க. அதனால பார்க்க முடியாது ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி உன் நண்பன்மேல் உள்ள பாசம் புல்லரிக்கவைக்கிறதுப்பா :)

சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
கோபி உன் நண்பன்மேல் உள்ள பாசம் புல்லரிக்கவைக்கிறதுப்பா :)
//

இருக்காதா.. பின்ன... :)) யாரவரு நம்ம பிரண்டாச்சே... :))

CLICK ONE CLICK கேமிராக் கவிதைகள்

CLICK ONE CLICK  கேமிராக் கவிதைகள்

நானெழுதும் மற்றொரு பதிவு/ my main blog

Followers