Thursday, August 14, 2008
மெகாப்போட்டிக்கு ஒரு குட்டியூண்டு குருவி
தமிழில் புகைப்படக்கலையின் ஆகஸ்ட் மாதமெகாப்போட்டிக்கான படம் இந்த முதல் படம்.
சிவிஆரின் ப்ளாக்கரில் படம் பெரியதாகக் காட்டுவது எப்படி? படிச்சு படம் பெரிதாகவும் வழக்கமான படம் சிறிதாகவும் எப்படி இருக்கும்ன்னு இன்று படித்த பாடத்துக்கு படம் காட்டியாச்சு..
வழக்கம்போல மொபைல் கேமிரா புகைப்படம் தான் .இந்த சின்ன பச்சை நிறக்குருவி பால்கனியில் இருக்கும் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து கொத்திக்கொண்டே இருக்கும். விரட்டினாலும் மீண்டும் மீண்டும் வருவது வழக்கம். கதவு திறந்திருந்தால் வராது. அதனால் கொசு நுழைய முடியாத வலைக்கதவின் உள்ளே இருந்து தான் புகைப்படம் எடுக்க முடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நான் தான் முதல் பின்னூட்டம்:)
போட்டில கலந்துக்குறேன்னு குட்டியூண்டு குருவிக்கெல்லாம் பரிசு கேட்க கூடாது ஆமாம்!குருவியைத் தேடித்தான் கண்டு பிடிக்கணும்:))
படம் அருமை...தலைப்பு அதை விட... படத்தை எடுத்த விதத்தை விவரித்திருப்பது அதை அதை விட...
கண்ணாடி பார்க்கும் குருவி:))!
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
தன் திருமுகம் காண திணறிக்கொண்டிருக்கும் குருவி - என்னைப்போலவே....!
:)))))
அக்கா, படத்தை அழகா எடுத்து இருக்கீங்க.... :)
கண்ணாடியோடு சண்ட போடற குருவியப் பாத்தா எனக்கு நம்ம ரஜினி ரசிகர்கள்தான் நெனப்புக்கு வராங்க... திரையில் தெரியும் பிம்பத்தை நம்பி, பாலபிஷேகமும், மண் சோறு திங்கும் ரசிகர்களுக்கும், இந்தக் குருவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை..
இந்தக் குருவியாவது ஒரு காலத்தில் திருந்திவிடும்....
கயல் அக்கா...பதிவுத்தலைப்பு நல்லா இருக்கு.....படம் அதைவிட ரொம்ப நல்லா இருக்கு!
கயல்விழி
குருவியா எங்கே ? காணோமே - அதுவும் பச்சை நிறக்குருவி ?
நல்வாழ்த்துகள்
நன்றி தமிழ்நெஞ்சம்..உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..
--------------
ராஜநடராஜன் .. போட்டி ஆரம்பிச்ச காலத்துல இருந்து கலந்துக்கறேன் ஒரு நாளும் நான் பரிசே கேட்டதுல்ல தெரியுமா :)அவ்வளவு நல்லபொண்ணு .. குட்டியூண்டுன்னு சொல்லிட்டேன்ல தேடித்தான் பார்க்கனும்..
ராமலக்ஷ்மி நன்றிப்பா...
அது விருட்டு விருட்டுன்னு பறந்துடும்.. போகஸ் செய்யறதுக்குள்ள மின்னலாட்டம் வந்து மின்னலாட்டம் போயிடும்ப்ப்பா.. மாசக்கணக்கா அதை எடுக்க ட்ரை செய்யறேன்.. ரொம்ப குட்டியூண்டு வேறயா.. :)
---------------------
ஆயில்யன் என்னப்பா இது உங்க ஊரில் சொந்தக்காரங்க தான் இல்ல.. .. சரி.. கண்ணாடி கூடவா இல்ல முகம் பார்க்க ..
இது உள்ள இருக்கும் குருவிய பார்த்து சண்டை போடும்..குருவி.
நன்றி தமிழ்ப்பிரியன் எப்படியோ நாமளும் ஜீப் ல ஏறிட்டோம்ல..
----------------
சூர்யா சொல்றதெல்லாம் சரிங்க..ஆனா நீங்க ஒரு நடிகரை குறை சொல்லிட்டு இன்னொரு நடிகரை ப்ரைபைல்ல வச்சிருக்கிங்களே..அதான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..... :)
நிஜம்மா நல்லவன் நன்றி ..தலைப்புல குருவிப்படம்ன்னா விஜய் படம்ன்னு நினைச்சு பயந்து ஓடாம இருக்கனும்....
------------------
சீனா சார் அதான் சின்ன குருவியாச்சே தேடுங்க கிடைக்கும்..
:)
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மதுரை ப்ராஜகட் பத்தி தெரியுங்களா..அதுல புறநானூறு போன்ற எல்லாம் பதிஞ்சுக்கிட்டுவர்ராங்க.. நீங்களும் சேர்ந்து உதவலாம்.. http://www.infitt.org/pmadurai/mp057.html
//
உங்க தகவலுக்கு நன்றி! அதன் தொடர்ச்சியா........
புறநானூற்றுத் தாய் - 1
http://maniyinpakkam.blogspot.com/2008/08/1_22.html
Post a Comment