முதன் முதலா கோனிகா கேமிரா வாங்கினப்போ சந்தோஷத்துக்கு அளவே இல்லை.. என் சம்பாத்தியத்தில் வேற வாங்கினேனா சொல்லனுமா ... அப்புறம் அதையும் இதையும் எடுத்து கத்துக்கிட்டு இருக்கும்போதே மணிரத்னம் படம் மாதிரி நமக்கும் இருட்டுல வித்தியாசமா கலைநயத்தோட படம் எடுக்கனும்ன்னு ஆசை வந்துருச்சு...
உடனே ஒரு மெழுகுவத்தி ஸ்டேண்ட் எடுத்து அதுல மெழுகுவத்தியை ஏத்திவச்சு ஒரு கண்ணாடி க்ளாஸ் வேற இருக்கும் அதுக்கு அதையும் போட்டு வச்சேன்.. மாடலா நிக்க என் தம்பியைக் கூப்பிட்டு "வா வந்து அப்படியே கன்னத்துல கை வச்சு போஸ் கொடுடா.. எதோ யோசிக்கற மாதிரி இருக்கனும் சொல்லிட்டேன்"னு பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு டைரக்ட் செய்து அவனும் நல்லா போஸ் கொடுத்தான்..
லைட்டு எல்லாம் அணைச்சுட்டு இருட்டுல க்ளிக்கியாச்சு க்ளிக்கினப்பறம் தான் தெரிந்தது அந்த கேமிரா ப்ளாஷ் அடிக்காதேன்னு சொன்னாலும் இருட்டுல தானாவே அடிச்சிடும் ன்னு. பிரிண்ட் போட்டப்ப பாத்தா ஒரு வித்தியாசமும் இல்லை.. பகல் போல வெளிச்சமா அதுல மெழுகுவத்தி பக்கத்துல சூப்பரா தலைவர் யோசிச்சிட்டு இருக்கார்.. :)
அதுக்கப்பறம் ரொம்ப நாள் கழிச்சு வாங்கின பெண்டக்ஸ் எம் 30 ல்
இருட்டுல எடுக்க தனியா ஒரு ஆப்சன் இருந்தது கை ஆட்டாம வச்சிருக்கனும். அது கொஞ்ச மெதுவா ஷ்ட்டர் திறந்து மூடும்.. அதுல எடுத்த படத்தை இப்ப இங்க போட முடியாது .. ஸ்கேன் பண்ண வசதி இல்லை.
சிங்கப்பூரில் ரொம்ப பக்கத்துல புலியை எடுத்தேன்.. கண்ணாடி க்கு பின்னால இருந்தது . கொஞ்சம் உத்து ப்பாக்கணும் படத்தை அவ்வளவுதான்.
அப்பறம் ரோல் வாங்கி கட்டுப்படியாகாத அளவு என்னோட போட்டொ எடுக்கும் ஆசை அதிகமா ஆனதால் வீடியோ கேமிராவுலயே எடுக்க ஆரம்பிச்சிட்டேன் .
அதுல கொஞ்சம் தரம் கம்மியா தான் இருக்கும் இருந்தாலும் கண்டதை எடுக்க வசதியான டிஜிட்டல் கேம்ராவாச்சே.. எடு அழிச்சுக்கோ கணினியில் குப்பையா சேத்துவச்சுக்கோன்னு இருக்கேன். .. இது எல்லாம் சர்வேசனின் முதல் "இரவு" புகைப்படம் பார்த்ததால் சுற்றப்பட்ட கொசுவத்தியே...
Saturday, November 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
\\உடனே ஒரு மெழுகுவத்தி ஸ்டேண்ட் எடுத்து அதுல மெழுகுவத்தியை ஏத்திவச்சு ஒரு கண்ணாடி க்ளாஸ் வேற இருக்கும் அதுக்கு அதையும் போட்டு வச்சேன்.. மாடலா நிக்க என் தம்பியைக் கூப்பிட்டு "வா வந்து அப்படியே கன்னத்துல கை வச்சு போஸ் கொடுடா.. எதோ யோசிக்கற மாதிரி இருக்கனும் சொல்லிட்டேன்"னு பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு டைரக்ட் செய்து அவனும் நல்லா போஸ் கொடுத்தான்..\\
சுத்தம்... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல! ;)
கடைசி படம் கலக்கல் ;)
mysore palace சூப்பர்.. அப்போ tripoid எல்லாம் வச்சிருக்கீங்க.. ஹ்ம்ம்... பிரொபஷணல் தான்..
புதுசா கேமிரா வாங்கினப்போ எல்லாருமே இப்படித்தானே..கோபிநாத்
நினைப்புத்தான் பொழப்பு கெடுக்குமாம்..
வயித்தரிச்சலைக் கிளப்பாதீங்க தீபா.. ட்ரைப்பாட் இன்னும் வாங்கலை.. வாங்கனும்ன்னு போட்டுவச்ச லிஸ்ட் ல இன்னும் இருக்கு..அது இல்லாம நாமளே ஆட்டாம அசையாம எடுக்க வேண்டியது தான். இப்போதைக்கு.. :(
அரண்மனை சூப்பர். அந்த காய்கறிகளில் ஒரு ஒளி தெரியாமல் இருந்தால் அதுவும் டாப் க்ளாஸ் தான் :)
புலிய ரொம்ப பக்கத்தில் பாத்தப்ப உங்களுக்கு பயம் இல்லை...
உங்களுக்கு கூடவே ஒரு உபதகவல், சிங்கை, மலேசியா போன்ற இடங்களில் புலி ஃபியர் ரொம்ப பிரபலம். :) (டைகர் ஃபியர்)
ரொம்ப அவசியமான தகவல் நாகை சிவா..
புலியை பாத்து ஏன் பயப்படறேன்.. கண்ணாடி இருக்கே நடுவில் .. ஆனா அது அவ்வளவா தெரியல பக்கத்துல நேரா பாக்குறமாத்ரி தான் இருந்தது.. இருந்தாலும் குனிஞ்சு நேரா ப்ளாஷ் இல்லாம எடுக்க சொன்னாங்களா முதல் முதலா அந்த கேமிராவில் இரவு மோட் செலக்ட் செய்து எடுத்தேன்..
அரண்மனைப் படம் அழகாக இருக்கு.
கடைசிப்படம் ரொம்ப அருமைங்க முத்துலட்சுமி. \\பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு \\ பின்ன இல்லியா
Mysore Palace Excellentu :)
படங்கள் அத்தனையும் நல்லா இருக்கு லட்சுமி.
பி சி ஸ்ரீராம் ரேஞ்சு எதுக்கப்பா.
இந்த ரேஞ்சே நல்லா இருகு. ஏன்னு கேட்டா இது கதையோட கூட வருதே:))
துர்கா,சின்ன அம்மணி, சர்வேசன் , வல்லி எல்லாருக்கு நன்றிகள்.
ரொம்பஏத்தாதீங்க சின்ன அம்மிணி.. பாருங்க கதையோட இருக்கு இதான் சூப்பருன்னு வல்லி வேற... சும்மாவே குறைகுடமா தளும்பரோம்... நீங்க வேற...
கடைசி படம்.
ஸ்டேண்டு போட்டு எடுத்ததா?
என்ன ஷட்டர் ஸ்பீடு?
அப்றேச்சர் என்ன வைத்திருந்தீர்கள்?
படம் சூப்பர்
வால்பையன்
வால்பையன் உங்களுக்கு தெரியாது போல.. நான் இந்த படத்தை எல்லாம் எடுத்தது என் க்ளிக் க்ளிக் தளத்துல இருக்கு பாருங்க தலைப்புல அந்த வீடியோ கேமிரால எடுத்த படங்கள்..
ஸ்டேண்ட் என் கை தான் ..ஆட்டாம வருதா இல்லையான்னு இரண்டு மூன்று எடுத்துக்கவேண்டியது தான்.. அதுல ஷட்டர் ஸ்பீடல்லாம் கிடையாது பாத்தா க்ளிக்கவேண்டியது தான். :( நான் இன்னும் டிஜிட்டல் கேமிரா வாங்கனும்...
நல்லாருக்குங்க..உங்க முதன் முதல்!!
அப்புறம்.. அரண்மனை ரொம்ப பிடிச்சிருந்தது! btw, புலி பயந்து போயிருக்குமே..:-)
பழச சேத்து ஏமாத்திட்டீங்களே முத்துலட்சுமி! பரவால்லை, ஆட்டையில சேத்துக்கலாமான்னு பரிசல்தான் சொல்லணும்.
//சுத்தம்... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல// நான் இன்னும் திறமைசாலில்ல. அதே சிச்சுவேஷன். பிளாஷ் போடாம படம் எடுத்திட்டேன் இல்ல. படம்தான் (வரவில்லை) கும்மிருட்டாக இருந்தது.
Post a Comment