Wednesday, November 5, 2008
காசிக்கு போய் பதிவெழுதுவதை விட்டுவிடவில்லை
காசிக்கு போனால் எதையாவது விடவேண்டும் என்று நான் பதிவெழுதுவதை விட்டுவிட்டேனென்று தமிழ்பிரியன் கிளப்பிக்கொண்டிருக்கும் புரளி தான் அவசரமாக இப்பதிவினை எழுதத்தூண்டியது. காசி அலகாபாத் செல்லும் பயணத்தை ஒரு புகைப்படப்பயணமாக நினைத்துக்கொண்டு என் ஸ்டேட்டஸ் மெஸேஜாகக் கூடப் போட்டுவைத்திருந்தேன். சிவி ஆர் மட்டும் தான் அடிக்கடி புகைப்படப் பயணம் போவாரா? நாங்களும் போவோம்ல..
ஆனா எனக்கு ஒரு முறை போட்டோ எடுக்க வாய்ப்பு தா என்று கேட்டுகொண்டே சின்னக்கேமிரா மேனும் அடம்பிடிப்பதால் சமாளித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வீடியோ வாக நிறைய எடுத்துவிட்டதும் புகைப்படங்கள் அதிகம் எடுக்காததற்கு காரணம்.
கையோடு நிறைய காலி சிடிக்கள் இருந்ததால் வீடியோ எடுக்கும் ஆசை அதிகமாகிவிட்டது.
வீடியோவை எடுத்து முடித்தவுடன் அது சேமிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பொறுமையாக காத்திருக்காமல் அவசரப்பட்டு போட்டோவுக்கு மாற்றுவதால் எடுத்த பகுதிகள் சில வற்றை இழக்க நேரிடும் என்பதை இப்பயணத்தில் புரிந்து கொண்டேன்.
இரவில் படம் எடுக்கும் போது பயன் படுத்த என்று "நைட் ஷாட் ப்ளஸ் " என்ற ஒரு பட்டன் இருப்பதையும் இம்முறை தான் பயன்படுத்தினேன்.
சாதுக்களின் நகரத்திற்குப் போய்விட்டு சாதுவைப் புகைப்படமெடுக்காவிட்டால் எப்படி? கங்கைக்கரையில் ஒரு சாது.
அவ்வப்போது இங்கே சில படங்களை பதிவிடுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
padangal super.
enakum sollithangapa.
சபரி அண்ணன் இப்ப பெரிய கேமராமேன் போல இருக்கு.. ஸ்டைலா படம் எடுக்கிறார்.. படம் இன்னும் நிறைய போடுங்க
காசிக்கு போய்ட்டு எதை விட்டீங்க... இதையும் சொல்லனும்.. ;))
படங்கள் அனைத்தும் சூப்பர்!
பதிவெழுதுவதை விடவில்லை.. சரி.. வேறு எதை தொலைத்து வந்தீர்கள்?!
கண்டிப்பா எல்லாரும் என்னை முந்தியிருப்பீங்க. அதால மீ த 25th
எத்தனை போட்டோ போட்டீங்கன்னாலும் நம்ம க்யூட் குட்டி கேமராமேன் மாதிரி வருமா?
அங்க என்னல்லாம் சாப்டீங்க? என்ன டிஷ் ஸ்பெஷல் அங்க?
//வீடியோவை எடுத்து முடித்தவுடன் அது சேமிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தில் பொறுமையாக காத்திருக்காமல் அவசரப்பட்டு போட்டோவுக்கு மாற்றுவதால் எடுத்த பகுதிகள் சில வற்றை இழக்க நேரிடும் என்பதை இப்பயணத்தில் புரிந்து கொண்டேன்.
//
எல்லாரும் பாத்துக்கங்க. முத்து இந்த பதிவுக்கான கருத்தை சொல்லிட்டாங்க:):):)
வருங்கால புகைப்ப்படக்கலைஞரை போட்டோ (சபரி)புடிச்சு போட்டிருக்கீங்க. காசில எங்க போனீங்க, எதை விட்டீங்க இதை முதல்ல சொல்லுங்க.
அண்ணாத்தை சூப்பரா இருக்கார்.
ஒளிஓவியர் போஸ் அட்டகாசமாப் பொருந்துது.
விவரமா எழுதுங்க இந்தத் தொடரை.
நன்றி தென்றல்..என்ன நான் உங்களுக்கா சொல்லித்தரனுமா... படம் பெரிசா மாத்தறதா? அதெல்லாம் நம்ம பதிவருங்க போடற பதிவுலேர்ந்து தேத்தறது தான்..இதுகூட நிலா அப்பா போட்ட போஸ்ட்ல இருந்து சுட்ட மெத்தட் தான்
=----------------
ஆமா தமிழ்பிரியன் அவரு எடுத்த போட்டோ எல்லாம் போட்டா அரண்டுருவீங்க..
----------------
சென்ஷி நான் புனிதப்பயணமாக போனால் தானே .. நான் தான் புகைப்படப்பயணமாக போனேனே..அ ப்ப எப்படி எதையாவது விட வேண்டிய கட்டாயம் வரும்..
ராப் சாப்பாடுன்னா நல்ல சவுத் இண்டியன் இட்லி சட்னி சாம்பார் மீல்ஸ் ன்னு நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரத்தில் வெளுத்து வாங்கியாச்சு..
அந்த ஊரு ஸ்பெஷல் சாப்பிடறதுன்னா..பால் ஸ்வீட் ஒன்னு இருக்கு அதை பாலில் கொஞ்சமாபோட்டு கொஞ்சம் பாலாடையும் சேர்த்து மண் கப்புல குடிக்கறது தான்.. அதுநார்த் இண்டியா முழுசுமே பேமஸ் தான்..
கருத்தா நானா? ப்ளீஸ் டோண்ட் டெல் தட் யா! டூ பேட் ! அதெல்லாம் நான் சொல்லமாட்டேன்.
-------------------
சின்ன அம்மிணி ... சென்ஷி க்கு சொன்ன பதிலைப்படிச்சிக்கோங்க..
சபரி ஒரு பிறவிக்கலைஞன் ..பிசி ஸ்ரீராம் கணக்கா ஒரு போட்டோ எடுத்திருக்கான் அதை அவன் பதிவில் போடறேன்.
---------------
கண்டிப்பா ஒரு தொடர் போட்டிரலாம் ..துளசி.. அமிர்தசரஸ் போலவே..
ஒளி ஓவியர் என்னமா யோசிச்சி சீரியஸா எடுக்கறார் இல்ல.. :)
சாது ஜூப்பர்!
நன்றி சர்வேசன் யாராச்சும் அந்தப்படத்தை தனியா சொல்லமாட்டாங்களான்னு இருந்தது..நன்றி நன்றி.. அவரு அந்த மர சோபாவில் குடைகீழ் உக்காந்திருந்தத போஸ் நல்லா இருந்தது .. அவசரமா தூரத்தில் இருந்தே போகஸ் செய்துட்டேன்.. இன்னமும் பக்கத்துல ஒரு ஆளை எடுக்கும் அளவு தைரியம் வரலை.. வெளிநாட்டினர் எல்லாம் அழகா போய் பக்கத்துல எடுத்தாங்க..
காசி பயணகட்டுரை எழுதுவீங்களா?
படம் புடிக்கும் கேமிராம்மேன் போட்டோ அருமையா இருக்கு:)
அழகா இருக்கு படங்கள் அதுவும் சபரியண்ணா போஸ் செம சூப்பர்! :)))
சாது சூப்பர்!
கூரியர் ஆகும் சிறுமுயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் :)))
எடுத்தவரைக்கும் சூப்பர்...இன்னும் இருக்குல்ல!? ;))
படங்கள் அருமை.
நன்றி
ஆகா ஆகா அருமையான படங்கள் - நாங்க காசிக்கு இப்பத்தான் பிப்ரவரி கடசி மார்ச் முத வாரத்துலே போய்ட்டு வந்தோம் - காசி கயா அலஹாபாத் - இன்பச் சுற்றுலா - அல்ல அல்ல - ஆன்மீகச் சுற்றுலா - மொதல்லேயெ இதெல்லாம் பாக்காமப் போய்ட்டோம்.பரவால்ல - ஒண்ணெயும் வுட்டுடல - ஆமா சபரி அண்ணனா (தமிழ்பிரியன்) - யாரு ஜீனியர் ஃபோட்டொ கிராஃபரா - ஆகா - நல்வாழ்த்துகள் அனைவருக்கும். நட்புடன் சீனா
Post a Comment