பறவைகளுக்கு பஞ்சமே இல்லைங்க எங்கவீட்டு பால்கனியிலிருந்து பார்த்தா ஒரு பறவைகள் சரணாலயம் ரேஞ்சுக்கு நிறைய பறவைகளைப் பார்க்கலாம். ஆனால் படம் எடுக்கறதுங்கறது சாதாரண விசயம் இல்லை. அது விருட் விருட்டுன்னு பறக்கும்.. ஒரு செகண்டு க்கொருமுறை அங்க இங்க பார்க்கும். இருந்தாலும் அவ்வப்போது க்ளிக்கி வைப்பது தான்.
தமிழில் புகைப்படக்கலை போட்டிக்காக இந்த மாதம் அனுப்புவதற்கென்றே ஒற்றைக்காலில் கொக்காட்டம் தவமிருந்து எடுத்த படங்களில் சிலவற்றை கூகிளில் போட்டிருக்கிறேன். போட்டிக்கான படம் இது தான். ( பெயர் என்னப்பா சொல்லுங்க ) ரொம்ப குட்டியூண்டு குருவி இது .. பறக்கும்போது அலைமாதிரி மேலும் கீழுமா பறக்கும்.
மேலே இருக்க படம் எடுக்கறதுக்கு முன்ன அடிக்கடி அங்க இங்க திரும்பி அது ரொம்ப படுத்திடுச்சு..
மயிலும் பருந்தும் நேற்று அருகில் வரவில்லை. லேப்விங் வந்தது ஆனால் என் கேமிரா க்ளோசப் போகவில்லை. சரி என்று என் வீட்டு பால்கனியில் அரிசி சாதம் என்று விருந்து வைத்து அழைத்தபோது வந்த பறவைகளை எடுத்திருக்கிறேன்.
கம்பத்தோடு கம்பமாக இருப்பவர் தலையைத் திருப்பி தரிசனம் தர எத்தனை நேரம்?
கம்பீர நடை போட்டவள் போட்டோ க்ளிக்கும்போது மட்டும் தலையை மேஜிக்கில் மறைத்துவிட்டாளே .
20 comments:
குருவி உங்களுக்கு ரொம்பப் புடிக்கும்னு நினைக்கிறேன்:)! ஜன்னல் குருவி நினைவிருக்கு.
குருவிக்கு விருந்து. பலே பலே.
போட்டிக்கான படம் நல்லா வந்திருக்கு. வாழ்த்துக்கள்!
கடைசிப்படம் :)))! பாவம்தான் நீங்கள்!
ஆமா ராமலக்ஷ்மி சரியா சொன்னீங்க.. குருவிக்கு விருந்து வைக்கன்னே அந்த மண் சட்டி.. ரொம்ப வெயிலானா அதுல தண்ணியும் ஊத்துவேன்.. தண்ணிக்கு தனியா வாங்கனும்..
முதலாவது பறவை sun bird மாதிரி இருக்கு, நல்ல குலோசா எடுத்துருக்கிரதினாலே அதன் அளவு கொஞ்சம் குழப்புது.... இருந்தாலும் தேடி பிடிச்சிருவோம்.
இரண்டாவது bulbul வகை... குறிப்பா என்னான்னு பார்ப்போம்..
மூணாவது blue rock pigeonனே :)
இப்போ பதிவ படிக்கிறேன்...
ஃபோட்டோஸ் அருமையா இருக்குது. பெரிய பெரிய புகைப்பட நிபுணர்கள் கூட இப்படி ஒரு ஷாட் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்களாம். டெல்லியில ஒரு பதிவர் சொல்லியிருந்தாங்க. ஆனாலும் அந்த கடைசி படத்தோட மாடல் உங்களை ரொம்பவே படுத்திடுச்சுன்னு நினைக்குறேன் ;-)
பறவையோட பேரு ஏதும் எனக்கு தெரியாது. அதனால ஜகா வாங்கிக்கறேன்!
//குருவிக்கு விருந்து. பலே பலே.//
சாப்பாட்டு போட்டு கூப்பிட்டிருக்கீங்க!
ரைட்டு!
ஒரு வேளை தலைநகர பாக்க வந்தா ஒரு கவலை தீந்துச்சு :))
//ஆனாலும் அந்த கடைசி படத்தோட மாடல் உங்களை ரொம்பவே படுத்திடுச்சுன்னு நினைக்குறேன் ;-)
//
எஸ்ஸு ரிப்பிட்டு !
ஒரு வேளை சாப்பாடு போதலியோ ! போஸ் கொடுக்கமாட்டேன்ன்னு அலும்பு பண்ணிடுச்சோ அந்த மாடல்! :)
காக்கா மாதிரி இருக்கே!!!!
கடைசி படம் புது தினுசா நல்லா தான் இருக்கு..ஸ்டைல்
கடைசி படம் அருமை ;)
இயற்கை நேசி நன்றி.. அளவு சின்னது தான் .நீங்க சொல்ற தேன்சிட்டு - சன் பேர்ட் வகையாவே இருக்கலாம்..சரி பார்க்க வேறு சமயம் படம் எடுத்து போடறேன்..
சென்ஷி கடைசி படம் புறாவோட பேருகூடவா தெரியாது ? :)
ஆயில்யன் குருவிக்கு வைக்கிற அரிசி போதுமா ? :)
பத்தாம போகலை அந்த புறாவுக்கு நல்லா சாப்பிட்டுட்டு பந்தாவ நடக்கிறதும் .. தன் இறகை க்ளீன் செய்துக்கவும்ன்னு .. அது ஒரு நொடி சும்மா இருக்குதா என்ன?
ஆதவன் .. அவ்வ்வ் ( உங்க ஸ்டைல்லயே) காக்காவைக்கூட சரியா பாத்ததில்லயா.. இது அலகு காக்கா மாதிரியா இருக்கு..?
தேன் சிட்டா இருக்க வாய்ப்பில்லை. மூக்கு இன்னும் நீளமா முனையில் லேசா வளைஞ்சு இருக்கணும்.
லோதி கார்டனில், தில்லிப் பறவைகள் லிஸ்ட் படங்களோட இருக்கு. அந்தப் பக்கம் போகும்போது பார்த்துக்குங்க.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
மங்கை ஆமா பாருங்க மயில் தோகை மாதிரி விரிச்சிக்கிட்டு நல்லா தான் இருக்கு ஆனா போட்டிக்கு எடுத்துப்பாங்களா.. ? :)
நன்றி கோபி .. ஒரு படத்தை எடுத்துட்டு சேவ் ஆக எடுத்துக்கிற கேப்பில் அது நல்ல அழகான போஸை குடுத்து என்னை ஏமாத்தும்..
ஓ துளசி நல்ல ஐடியா சொன்னீங்க.. இனி போகும்போது ஒரு நோட்டம் விட்டடறேன்.. சில சமயம் கண்ணை மூடிக்கிட்டே போகவச்சிடுவாங்க பார்க்ல அதான் :))
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
சென்ஷி கடைசி படம் புறாவோட பேருகூடவா தெரியாது ? :)//
:-(((
என்ன கொடுமைக்கா இது?!
அதுதான் முகத்தையே காட்டலையே! அப்புறம் எப்படிக் கண்டுபிடிக்கறது??
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்
//தேன் சிட்டா இருக்க வாய்ப்பில்லை. மூக்கு இன்னும் நீளமா முனையில் லேசா வளைஞ்சு இருக்கணும்.//
துள்சிம்மோய், Nectariniidae = Flowerpeckers, spiderhunters, sunbirds
அந்தக் குடும்பத்திலதான் இந்த பூக்கொத்திகளும் வாராய்ங்க! அதுனாலேதான் படத்தை பார்த்தவுடன் நமக்கு தெரிஞ்ச அந்த குரூப்போட இணைத்துக் கொண்டோம்... ஆனா, குறிப்பா என்ன விதமான பூக்கொத்தின்னுதான் தெரியல.
Post a Comment